உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

239

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருமதி பொன்னம்மாள் அவர்கள் கருத்துச்சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் கட்சி சார்பிலே பேசி இருக்க வேண்டும். கட்சி சார்பிலே பேசுவதற்கு வாய்ப்புக் கொடுப்பது நான் அல்ல, அடுத்து திரு. பி. வெங்கடசாமி.

THIRU B. VENKATASAMY : Hon. Speaker Sir, Hon. Chief Minister was telling that the ELCOT, Hosur has earned a profit of Rs.4 crores. But I am sorry to state that the ELCOT which was started in Hosur, now converted into ELNET is now under the process of closure because of the mis-management of the Managing Director, who was posted there. So, I request our Hon. Chief Minister to rectify this. I am also giving a letter to the Hon. Chief Minister to set right the things.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, ஹேசூர் எல்காட் பற்றித்தானே? என்ன பிரச்சினை.

திரு. பி. வெங்கடசாமி : பேரவைத் தலைவர் அவர்களே, அதற்கு வேறு எம்.டி.-ஐப் போட்டு விட்டார்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அதைப்பற்றித் தனியாக என்னிடத்திலே விவரம் தருவார்களேயானால், உடனடியாக விசாரித்து அதைப்பற்றிக் கூற இயலும்.