உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

251

தாமதமாகுமேயானால் WORLD TEL -க்குப் பதிலாக வேறு ஒரு பெரிய நிறுவனத்தை அணுகி விரைவில் இந்த சமுதாய இணையம் தமிழகம் முழுவதும் பரவிடவும், இலட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் அந்தப் பெருமுயற்சியை அவர்களிடமிருந்து மாற்றிக்கூட வேறு ஒரு நிறுவனத்திற்கு அதை ஒப்படைக்கலாமா என்றுகூட அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது, இன்னும் முடிவாகவில்லை. இப்படிச் சொல்வதால் இவர்களுக்கு அறவே இல்லை என்றும் பொருள் அல்ல. அவர்கள் தாமதம் செய்வார்களேயானால் வேறு ஒருவருக்கு இதை மாற்ற முடியுமா என்பதையும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் அ. செல்லக்குமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சாம் பிட்ரோடாவினுடைய சொந்த நிறுவனம் என்பது அல்ல என்னுடைய கருத்து. அதைப்போன்று இன்னும் பல நிறுவனங்கள் International Level-ல் இருக்கின்றன. நீங்கள் இந்தத் துறையைப் பொறுத்தவரையில், 11/2 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு வணிகமாக நடைபெற இருக்கிறது. நாளையதினம் 13,000 இணையங்கள் ஆங்காங்கு பொருத்தப்பட்ட பிறகு, தமிழகத்து மக்களிடமிருந்து ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ரூபாய் என்று வசூலிக்க யிருக்கிறார்கள். அதிலே அரசுக்கு ஒரு பங்கு, 26 சதவிகிதம் என்று நான் கருதுகிறேன். அந்த 26 சதவிகிதம் அரசுக்குக் கிடைத்திருந்தாலும் இன்னொரு நிறுவனத்திற்கு போக இருக்கிறது. அதைவிடக் குறைவான கட்டணத்திலே வேறு நிறுவனங்கள், இதைவிடத் திறமையான நிறுவனங்கள் இதிலே பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும். எனவே, Transparency என்று சொல்கிறபோது Global tender -ல் நீங்கள் இதற்கும் அழைப்புகளை விடுத்திருக்கலாம். இதைவிடச் சிறந்தவர்கள் இதிலே பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை ஏன் விடவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த யோசனையை முன்வைத்து இந்தியா