256
தொழில்துறை பற்றி
ஓசூரில் 140 கோடி ரூபாயில் "டைட்டானியம் டை ஆக்ஸைடு” தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
சிப்காட் துணையோடு கடலூரில் 20 கோடி ரூபாய் முதலீட்டில் மரவள்ளிக்கிழங்கிலிருந்து இரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் "உஸ்தா-தே-பயோடெக்" தொழிற்சாலை தொடங்கப் பட்டது.
6 கோடி ரூபாய் செலவில் “டான்டெக் தொழிற்சாலை கடலூரில் தொடங்கப்பட்டது.
ஆக்ரோ”
40 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் "டங்ஸ்டன் மெட்டல் பவுடர்” தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
மணலியில் 189 கோடி ரூபாய் முதலீட்டில் "தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ்” தொழிற்சாலை 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களிலே தொடங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் மணலியில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “டி,பி, பெட்ரோ புராடக்ட்ஸ்" தொழிற்சாலை மற்றொன்று தொடங்கப்பட்டது.
மேலூருக்கு அருகில் நரசிங்கம்பட்டியில் ஏறத்தாழ 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "தமிழ்நாடு மெக்னீசியம் மற்றும் மெரின் இரசாயனத் தொழிற்சாலை” தொடங்கப்பட்டது.
கடலூரில் 29.50 கோடி ரூபாய் முதலீட்டில் “தமிழ்நாடு புளோரின் மற்றும் சல்பைடு கெமிக்கல் தொழிற்சாலை" 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஓசூரில் 184 கோடி ரூபாய் முதலீட்டில் “டைட்டான்" கைக்கடிகார உறுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப் பட்டது.
அதற்குப் பிறகு 1991-லிருந்து 1996 வரை, 5 ஆண்டுக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் 21 தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டன. அதற்கான மொத்த முதலீடு 1.125 கோடி ரூபாய்