260
தொழில்துறை பற்றி
4.5 கோடி ரூபாய் செலவில் கரூர் அருகிலே உள்ள அப்பர்பாளையத்தில் கரூர் யார்ன் லிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நூல்ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை.
10 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் டாரஸ் நாவல்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் டோலமைட், ஸ்டோன்வேர் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
21 கோடி ரூபாய் செலவில் திருப்போரூரில் ஸ்ரீராம் ஆட்டோ காம்போனென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ மொபைல் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
11 கோடி ரூபாய் செலவில் சென்னைக்கருகில் உள்ள மணலியில் ரமணசேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உலோகச் சுருள்களைத் தகடாக மாற்றும் தொழிற்சாலை.
12 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூரில் இன்சில் ண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை.
33 கோடி ரூபாய் செலவில் புழல் கிராமத்தில் செம்பவாங்- ஸ்ரீராம் நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனம் இது, இதன் பொருள் விநியோகத் தொழிற்சாலை.
500 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் சிஸ்கால் நிறுவனத்தின் எஃகுத் தொழிற்சாலை அண்மையிலே திறந்து வைக்கப்பட்டது. நான்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
756 கோடி ரூபாய் செலவில் சென்னை பேசின் பிரிட்ஜில் ஜி.எம்.ஆர். வாசவி நிறுவனத்தின் மின் திட்டம்.
மொத்த முதலீடு ரூபாய் 6,067 கோடி. இதில் நேரடியாக வேலை வாய்ப்பு 9,626 பேருக்கு; மறைமுகமான வேலை வாய்ப்பு 18 ஆயிரம் பேருக்குக் கிடைக்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
இஃதன்னியில் இப்போது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொழில்கள் அவை எவை என்று பார்த்தால், 450 கோடி ரூபாய் செலவில் திருப்பெரும்புதூரில் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவைக் கண்ணாடி தயாரிக்கும்