உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

265

"Tamil Nadu followed closely by Gujarat has taken the lead in terms of the number of 100 per cent export oriented units set up since liberalisation, displacing Maharashtra the traditional leader amongst the industrially developed States."

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை களுக்குப் பின், 100 விழுக்காடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு, தொழில் நிறுவனங்களை நிறுவுவதில் தமிழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). குஜராத் அதற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த மாநிலங்கள் வரிசையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த வந்த மராட்டிய மாநிலத்தை தமிழகம் தற்பொழுது முந்தியுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

இன்னும் அந்த ஏடு, 'Economic Times' எழுதுகிறது. "The State-wise distribution of 100 per cent export oriented units since liberalisation indicates that Tamil Nadu has taken the lead in terms of the number of units set up."

(தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை களுக்குப் பின், 100 விழுக்காடு ஏற்றுமதி அடிப்படையில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை மாநில வாரியாகக் கணக்கிட்டதில் தமிழகம்தான் தலைமை இடத்தைப் பெற்றுள்ளது.) (மேசையைத் தட்டும் ஒலி).

மேலும் அந்த ஏடு எழுதுகிறது. "As against 3,503, cent per cent EOUS which have come up country-wide, since liberalisation, one sixth have been in Tamil Nadu, followed by Maharashtra, Gujarat, Andhra Pradesh and Karnataka."

பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பின் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்ட 100 விழுக்காடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட 3,503 தொழில்களில் ஆறில் ஒரு பங்கு தொழில்கள், அதாவது 584 தொழில்கள் தமிழகத்திலே தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை அடுத்து மராட்டியம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆ ஆகிய மாநிலங்கள் வருகின்றன