உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

267

சி.டி.ஆர். என்பது வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்துக் கொள்வது என்பதாகும். அது அதன் திறமையைப் பொறுத்துள்ளது. அதே சமயம் அந்த வங்கிகளின் உள்கட்டமைப்பு, அந்தப் பகுதியில் கடன் வசூல் செய்யும் திறன், முதலீட்டிற்காக உதவும் தன்மை, வங்கிக் கடன் வசூல் செய்ய போதுமான வசதிகள் ஆகிய அனைத்தையும் சார்ந்தும் அது இருக்கும். அதுதான் சி.டி.ஆர். என்பதாகும். அதிலும் நாம் தலைமை இடத்தில் இருக்கிறோம் என்பதை இந்தப் புள்ளிவிவரம் விளக்குகிறது.

18-12-1998 நாளிட்ட ‘எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையில் இலண்டன் மாநகரத்தைச் சேர்ந்த சர்வதேச ரியல் எஸ்டேட்ஸ் (International Real Estates) என்னும் நிறுவனத்தின் ஆலோசகர் ஜோன்ஸ் லாங்க் ஊட்டன் (Jones Long Wootten) சொல்லி யிருக்கிறார் "Chennai - சென்னை என்றே சொல்லியிருக்கிறார் பாருங்கள். நாம்தான் இன்னும் 'மெட்ராஸ்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் "Chennai has distinct strength over other

Cities for attracting investments."

அதாவது, முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலே பல நகரங்களைவிட சென்னை சிறப்பான வளங்களைப் பெற்று முன்னணி இடம் பெற்றுள்ளது என்று ஜோன்ஸ் லாங்க் ஊட்டன் பாராட்டிஉள்ளார்.

விகடன் பத்திரிகையில் 13-9-1998 ஒரு தலையங்கம். "தீர்க்கதரிசனத்துடன், நாளைய சவால்களுக்கு நாட்டைத் தயார்படுத்துவதுதான் ஆளுவோரின் இலட்சியமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய தகவல் தொழில்நுட்ப தொழிலதிபர்கள் கூட்டம் மிகவும் முக்கியமானது. விப்ரோ, பெண்டாஃபோர், டாடா கன்சல்டன்சி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து முன்னணித் தொழிலதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் மற்ற தொழில்களும் நன்கு வளரமுடியும் என்பதை அரசு உணர்ந்து காரியத்தில் இறங்கியிருப்பது பாராட்டத்தக்கது” என்று விகடன் பத்திரிகை தலையங்கம் மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறது