உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

தொழில்துறை பற்றி

தட்டும் ஒலி) எல்லோரும் ஞாபகப்படுத்திக்கொள்ள, பொது மக்களும் ஞாபகப்படுத்திக்கொள்ள இதை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

கிரானைட் குத்தகை விடுவதிலே ஏற்பட்டது சம்பந்தமாக ஒரு வழக்கு. ஏற்கெனவே இந்த அரசு கிரானைட் குத்தகையிலே உள்ள ஊழல்களுக்காக தனி நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருக்கிறது. அந்த வழக்கிற்கான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையிலே, அந்த வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் தொழில்துறை அமைச்சர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அந்த வழக்கையே quash செய்ய வேண்டும் என்று ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதி என்ன தீர்ப்பு அளித்தார் என்பதை இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன். அந்த ஆணை எப்படிப் பிறப்பிக்கப்பட்டது? எந்த ஆணையின் அடிப்படையில் அந்தத் தவறு நடைபெற்றது? 39 என்கிற ஒரு விதி. அரசாணை எண் 97, தொழில் துறை, நாள் 8-3-1993 மூலம் முந்தைய அரசு தமிழ்நாடு சிறு கனிம விதிகளில், விதி 39 என்ற புது விதியை ஏற்படுத்தி, குவாரி குத்தகைகளை விருப்பப்பட்டவர் களுக்கெல்லாம் வழங்கியது. 1989ஆம் ஆண்டில் கழக அரசின் தொழில் துறை பிறப்பித்த ஆணையின் படி அரசுக்கு வருமானம் வர வாய்ப்புகள் இருந்தும், (கவனிக்க வேண்டும்) நாம் போட்ட ஆணையின்படி அரசுக்கு நிறைந்த வருமானம் வர வாய்ப்புகள் இருந்தும், உயர் நீதிமன்றத்திலே உரிமம் வழங்குவது குறித்த பல வழக்குகள் நிலுவையிலே இருந்தும், குத்தகைதாரர்கள் அரசு கோரும் தொகையைச் செலுத்த விருப்பம் தெரிவித்து கடிதங்கள் கொடுத்திருந்தும் - ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் எல்லாம் விருப்பம் தெரிவித்து கடிதங்கள் கொடுத்திருந்தும் - வனத் துறை நிலத்தில் உரிமம் வழங்க மத்திய அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் இருந்தும், அந்த விதியையும் மீறி, அப்போதைய அட்வகேட் ஜெனரலும், அரசு தலைமைச் செயலாளரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும், வேண்டாமென்று தடுத்துக் கூறியிருந்தும், அரசுக்கு ஒரே ஒரு குத்தகை மூலமாக மட்டும் 12 கோடி ரூபாய் வருமானம் வர வாய்ப்பு உள்ளது எனக்