உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

279

அப்போதைய கழக அரசு அளித்த ஊக்கத்தின் காரணமாக தமிழகம் இந்தியாவிலே மூன்றாவது இடத்தை அடைந்திருந்தது. இது 1989-91-ல். அப்போது தி.மு.க. ஆட்சி. பிறகு, 1991-96 கால கட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியின்போது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கி, ஐந்தாவது இடத்திற்கு இறங்கிவிட்டது. 1996-ல் கழக அரசு மீண்டும் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தொழில் வளர்ச்சிக்குத் தொடர்நிலை அளித்துவரும் ஆக்கம், ஊக்கம் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் தொழில் வளர்ச்சியிலே மீண்டும் தலை நிமிர்ந்து முன்னணியிலே இருந்து வருகிறது. அண்மையில் 22-4-200 தேதியிட்ட இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் C.M.I.E. - Centre for Monitoring Indian Economy, இந்திய மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை யெல்லாம் தொகுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டது, 22-4-2000 அன்று. அதன் விவரங்களை இங்கே தர விரும்புகின்றேன். தமிழ் நாடு 1,14,893 கோடி ரூபாய். இது ஒப்புதல் அளிக்கப்பட்டு செயலாக் கத்தில் உள்ள இந்தியாவின் மொத்த முதலீட்டில் 10.89 சதவீதம் ஆகும். மராட்டியம், 1,55,326 கோடி ரூபாய், குஜராத் 1,41,207 கோடி ரூபாய், ஆந்திரா 1,33,587 கோடி ரூபாய், ஒரிசா 1,14,070 கோடி ரூபாய், கர்நாடகம் 93,754 கோடி ரூபாய். இந்தப் புள்ளிவிவரங்களின்படி மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அதாவது, வித்தயாசம் 1.04 சதவீதம்தான்.

ஆனால், அதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்ன வென்றால், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் C.M.I.E.-அதாவது Centre for Monitoring Indian Econmy முதலீடு களைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தொகுக்கும்போது, தமிழ் நாட்டில் சேர்த்திருக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாயை- விவரங்களைச் சொல்ல வேண்டுமானால் அந்த 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நெய்வேலி மூன்றாவது சுரங்கம் வெட்டுவதற்கான 5,500 கோடி ரூபாய் முதலீடு, நெய்வேலி மூன்றாவது தெர்மல் பவர் ஸ்டேஷனுக்கான 7,500 கோடி ரூபாய் முதலீடு, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்தின் வித்தியாச முதலீடான 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆகியவற்றைச் - சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயையும் சேர்த்திருப்பார்களேயானால், இந்த நிலை முதல் நிலையாகவே ஆகியிருக்கும். மராட்டியம் அடுத்த நிலைக்குச் சென்றிருக்கும். இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டுமென்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி