286
தொழில்துறை பற்றி
பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி என்ற இடத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய வன்பொருள் மற்றும் மென் பொருள் வளர்ச்சிக்குப் பன்னாட்டுத் தரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் சிறுவனம் உருவாக்கி வருகின்றது.
சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்னும் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தைத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இந்தப் பகுதிகளில் நிறுவி
உள்ளன.
தமிழக அரசு 'தமிழ்நெட் 1999' என்ற உலகத் தமிழ் இணைக் கருத்தரங்க மாநாட்டை சென்னையில் நடத்தியது. அதையொட்டி, தமிழ் விசைப் பலகையும், தமிழ்க் குறியீடுகளும் தரப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவிலுள்ள யூனிக்கோட் கன்சோர்டியம் எனும் மையத்தில் தமிழ்நாடு, கூட்டு அங்கத்தினராகப் பதிவு செய்து கொண்டுள்ளது. இதில் அங்கத்தினராகும் முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் Tamil Virtual University - டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல் நிலைப் பள்ளி களிலும் - கடந்த ஆண்டு 600 பள்ளிகள், இந்த ஆண்டு கல்வித் துறையினுடைய முயற்சியினால் மேலும் 600 பள்ளிகள் - 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாக வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டுவிட்டது. இத்திட்டத்தினை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-4-1999 அன்று தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அப்போது உயர்நீதிமன்றம் சொன்னது - தள்ளுபடி செய்துவிட்டு தீர்ப்பிலே உயர்நீதிமன்றம் சொன்னது ‘அரசின் இந்தப் பொன்னான நோக்கத்தால், அடுத்த ஆண்டு 48 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்பதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. தமிழக அரசின்மீது இந்த நீதிமன்றம்