உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளன”

போதுமான குறிப்பிடப்பட்டுள்ளது.

299

என்று

அடுத்தது, "The Government of Tamil Nadu are not in a position to provide substantial funding due to the present finan- cial situation and other priorities." அதாவது "தற்போதைய நிதி நிலவரம் மற்றும் பிற முன்னுரிமைகள் காரணமாக, மேலும் நிதி வழங்கும் நிலையிலே தமிழக அரசு இல்லை. அந்த ஆலைக்கு இல்லை.” என்று மறுபடியும் கடைசியாச் சொல்கிறார்கள், பாருங்கள், "The Government have taken a decision that wherever pos- sible the investment in the Public Sector Companies may be disinvested." அதாவது "பொதுத்துறை கம்பெனிப் பிரிவுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம் திரும்பப்பெற அரசு ஒரு முடிவு செய்துள்ளது” என்று அ.தி.மு.க. அரசு கொடுத்த Affidavit-லே குறிப்பிட்டுவிட்டு, இந்த இலட்சணத்திலே எங்களைப் பார்த்து, "நீங்கள் அரியலூர் சிமெண்ட் ஆலையை விற்கப்போகிறீர்கள்” என்று சொல்வது, (மேைைசயத் தட்டும் ஒலி) மயிலைப் பார்த்து, ஏதோ பழித்த கதையாகத்தான் இது இருக்கிறது. நாகரிகமாகச் சொல்கிறேன். ஏதோ என்று, அந்த அளவுக்கு வேண்டுமென்றே இந்த அரசு மீது, எந்தத் துறையானாலும், அந்தத் துறையை மையப்படுத்தி, புகார் சொல்ல, புழுதி வாரித் தூற்ற அ.தி.மு.க. வின் நண்பர்கள், அதனுடைய தலைவியார் அறிக்கைகள் மூலமாகச் செய்கின்ற முயற்சிகள் எடுபடாது என்பதையும், தொழில் வளர்ச்சிக்காக இந்த அரசு. . . . . (குறுக்கீடு).

திரு. சோ. பாலகிருஷ்ணன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு விஷயம். இன்று தனியார் சிமெண்ட் ஆலைகள் எல்லாம் மிக நவீனமான இயந்திரங்களை வைத்து சிறப்பான முறையில், சிமெண்ட் தயார் செய்வதன் மூலமாக அவர்கள் குறைந்த விலையில் தயார் செய்து, நிறைந்த விலையில் விற்கின்ற வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த சிமெண்ட் ஆலைகளை நவீனப் படுத்துவதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.