உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

301

நவீனமயமாக்க வேண்டுமென்று கேட்டார்கள். இப்போது ‘அரசு சிமெண்ட்' வாங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இப்போது அரசு சிமெண்ட் வாங்கப்பட்டது. ஆனால், வெளி மாநிலத்திலிருந்து வருகின்ற சிமெண்ட் அது இங்கே சொன்ன ‘அம்புஜா' மாத்திரம் அல்ல, எல்லா சிமெண்ட்டும் வந்திருக்கிறது. இப்போது மின்சாரத் துறைக்குக்கூட அந்த சிமெண்ட்தான் வாங்கப்பட்டு இருக்கிறது - 85 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அதே நேரத்தில் அரசு சிமெண்ட் 145 ரூபாய் விலை ஆகிறது. 145 ரூபாய் சிமெண்ட் அவர்களால் வாங்க முடியவில்லை. வாங்கினால் திட்டச் செலவு அதிகமாக ஆகும். எனவே, வாங்க முடியவில்லை, ஆகவே வாங்குவதில்லை, அதுவும் ஒரு காரணம். இவற்றை யெல்லாம் சரிபார்த்து இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்கள் இங்கே சொன்னார்களே, 50 சதவிகிதத்திலே போட்டி போட்டுக் கொண்டு, டெண்டரில் போட்டி போட்டுத்தான் சிமென்ட்டை விற்க வேண்டியிருக்கிறது. மாற்ற வேண்டுமென்று சொன்னார்கள் அதை மாற்ற முடியுமா, அதை மாற்றி ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியுமா என்று பார்ப்பதற்காக, அதைச் சீரமைத்து நவீனப் படுத்துவதற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, நம்முடைய தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறது. அந்தக் குழு பரிசீலித்து, ஒரு கருத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி அந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட பிறகு, நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, மேலும் நவீனப்படுத்தி, இந்தச் செலவினங்களைக் குறைக்கவும், சிமென்ட் உற்பத்தியை அதிகமாக்கவும், அப்படி அதிகமாக்கும் சிமென்ட்டுக்கு நல்ல கிராக்கி ஏற்படுத்துவதற்கும், அந்தக் குழுவின் மூலம் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த அளவில் இன்றைக்கு (குறுக்கீடு) இதை முடித்து விடுகிறேன்.

நிறைய வெட்டுத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டிருக் கின்றன. வெட்டுத் தீர்மானங்களுடைய எண்ணிக்கை 111. நம்பர்