316
-
தொழில்துறை பற்றி
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்திலேதான் State Industries Promotion Corporation of அன்றைக்கு 'சிப்காட்' Tamil Nadu என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம். இன்றைக்குப் பேசப்படுகிற 'சிப்காட்' இருக்கிறதே, தமிழகமெங்கும் இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற தொழில் வளத்தை உருவாக்கி இருக்கிறதே, அந்த 'சிப்காட்', யார் முதலில் கொண்டு வந்தார்கள், யார் பின்னால் கொண்டு வந்தார்கள் என்று தொழிற்சாலைகளுக் கெல்லாம் இன்றைக்கு நாம் சண்டை போட்டுக் கொள்கிறோமே, நான் அவர்களுக்குச் சொல்லுகின்றேன், அதற்கு முன்பு 'சிப்காட்' போன்ற பெரிய அளவிலே இல்லாத சிறு சிறு அமைப்புகள், park-கள் பூங்காக்கள் இருந்தாலும்கூட, பெரிய அளவில் இராணிப்பேட்டையிலும், ஓசூரிலும், 'சிப்காட்' என்ற இந்த நிறுவனத்தை (மேசையைத் தட்டும் ஒலி) அமைத்தது, 1971ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை நான் மிகுந்த அடக்கத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்பு கின்றேன்.
'சிப்காட்' நிறுவனம் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும், ஒரேயிடத்தில் வழங்கக்கூடிய தொழில் வளாகங்களை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட இடங்களிலே ஒன்றுதான், இராணிப்பேட்டை என்பதை நீங்கள் அறிவீர்கள். இராணிப்பேட்டைதான் தமிழ்நாட்டில் அமைந்த முதல் தொழில் வளாகம் என்பதை நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன். எப்படி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதொழில் வளர்ச்சிக்கு, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடைய ஆட்சியில், பக்தவச்சலம் போன்றவர்களுடைய ஆட்சியில், சுப்ரமணியம் போன்றவர்கள் நடத்திய ஆட்சியில், கிண்டி தொழிற்பேட்டையும், அம்பத்தூர் தொழிற்பேட்டையும், ஆதாரத் தளங்களாக அமைந்தனவோ, அதைப்போல, பெரிய தொழில் வளர்ச்சிக்குக் கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட 'சிப்காட்' வளாகங்களே, ஆரம்பத் தளங்களாக அமைந்தன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இராணிப்பேட்டையிலும், ஓசூரிலும், 'சிப்காட்' தொழில் வளாகம் நிறுவப்பட்டு, இராணிப்பேட்டையிலே, 729 ஏக்கர் பரப்பளவில், தொழில் வளாகம்