கலைஞரின் சட்டமன்ற உரைகள்
-
321
அமைத்ததன் காரணமாக சென்னை, “ஆசியாவின் டெட்ராய்ட்” (Detroit) என்று வர்ணிக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி). இந்தியாவின் மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தியில், 35 சதவிகிதம், சென்னையில் உற்பத்தியாகின்றன. இந்த உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களில் பலரும், பெரும் ஏற்றுமதியாளர் களாகவும் உள்ளனர். இத்துறையில் புதிய முதலீடுகளின்மூலமாக ஏற்படக்கூடிய தேவையை நிறைவுசெய்ய, ஒரகடம் 'சிப்காட்' தொழில் பூங்காவில் மோட்டார் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Automotive Special Economic Zone) ஏற்படுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
மிகப் பெரிய சுற்றுலாத் தலமாகவும், கோயில் நகரமாகவும் விளங்குகின்ற மதுரையில், நீண்டகாலமாக பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வகையில், மதுரை அருகில் 'சிப்காட்' நிறுவனம் மூலமாக, ஒரு பெரிய தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருள் உற்பத்தி, தமிழகத்தின் தொழில் துறையில் நீண்டகாலமாக ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இத்துறையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைச் சரி செய்யும்வகையில், ரூபாய் 115 கோடி மதிப்பில், 11 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis) சாதனங்களை அமைக்க, நிதியுதவி கோரி மாண்புமிகு பிரதமரிடம் நான் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
தோல் பதப்படுத்தும் மற்றும் தோல் பொருள் உற்பத்தி வளாகம் ஒன்று அமைக்க, சென்னை அருகில் 'சிப்காட்' நிறுவனம் மூலமாக 250 ஏக்கர் பரப்பில் ஒரு புதிய தோல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2,30,000 மெட்ரிக்