324
தொழில்துறை பற்றி
அறிக்கையிலும்
தேர்தல் அறிக்கையிலும், நிதிநிலை குறிப்பிட்டுள்ளபடியும், இரண்டாவது டைடல்' தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று, சென்னை தரமணியில் நிறுவப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
தமிழக அரசும், மத்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவனமும், தனியார் துறையும் இணைந்து, கோவையில் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை நிறுவும். (மேசையைத் தட்டும் ஒலி).
சென்னையில் மட்டும் பெரிதும் மையம் கொண்டுள்ள தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்களிலும் பரவி, பலனளிக்கும்வகையில் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
மத்திய அரசு அறிவித்துள்ள, உலக தரத்திலான தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றுக்கான இந்தியக் கல்வி நிறுவனம் சென்னைக்கு அருகே நிறுவப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வெகுவான முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகளை வகுத்துச் செயல்படுத்த, முன்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அமைக்கப்பட்டு, இடைக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பணிமுனைப்புக் குழு (I.T. Task Force) ஒன்று மீண்டும் உருவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
மின்னணு ஆளுமை (e-governance) நகரங்களில் உள்ள மக்களைப் போலவே கிராமங்களில் உள்ள மக்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழகம் ஒரு முன்னோடி மின்னணு ஆளுமை மாநிலமாகத் திகழும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
தற்பொழுது சென்னையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கென தனியே சொந்தமாகக் கட்டடம் அமைவதற்கேற்ற நிலமும், ஒரு கோடி ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).