உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

33

என்று எப்படி கேட்பது? எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது என்று எனக்கே புரியவில்லை. அந்தக் குற்றச்சாட்டை கூறியவர்கள்தான் விளக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்வேன். அது மாத்திரம் அல்ல, அசோக் லேலண்ட் எக்ஸ்பேன்ஷன் என்ற அளவிலே ஒரு பெரிய தொழில் திட்டத்தைச் சொல்லி, சில சலுகைகளை தரவேண்டுமென்று வைத்துக் கேட்ட நேரத்திலே, அந்தச் சலுகைகளை அளிக்க இயலாது என்று ஒரே பிடிவாதமாக அளிக்க மறுத்துவிட்ட காரணத்தால் இன்றைக்கு அந்த தொழிற்சாலை ராஜஸ்தானத்திலும், மராட்டிய மாநிலத்திலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புத் தருகிற திட்டமாக அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் கேட்ட சலுகைகளை அந்த இரு மாநிலங்களும் தருகிற அளவிற்கு முன் வந்த காரணத்தால், அசோக் லேலண்ட் எக்ஸ்பேன்ஷன் திட்டம் இங்கே இடம் பெறாமல் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது என்பதையும் ஒரு குறைபாடாகத்தான் கருத வேண்டும் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

ரு

கழக ஆட்சிக் காலத்திலே, மத்திய அரசோடு வாதாடி போராடி திட்டங்களைப் பெறவில்லை என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் ஒருவர் பேசும்போது கூறினார். திராவிட முன்னேற்றக் கழக அரசு மத்திய அரசோடு, விரோதத்தை வளர்த்துக் கொண்ட காரணத்தால் பல திட்டங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்று இங்கே கூறினார்கள். அவர்களாவது நட்பை வளர்த்துக் கொள்ளட்டும். நான் அதை வரவேற்கிறேன். ஆனால் னால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி விரோதத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. எந்த நேரத்திலேயும் உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அந்த அடிப்படையிலேதான் மத்திய அரசோடு தன்னுடைய வாங்களை எடுத்து வைத்திருக்கிறது.

சேலத்திலே இரும்புத் தொழிற்சாலை திட்டம் தேவை என்பதற்காகவும்; நெய்வேலி திட்டத்திற்காகவும் தூத்துக்குடி துறைமுக திட்டத்திற்காகவும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த காலத்திலே எழுச்சி நாள்