கலைஞரின் சட்டமன்ற உரைகள்
35
என்று ஐயத்தக்க அளவிற்கு அது கவனிப்பாரற்ற நிலைமையிலே இருந்து வருகிறது என்பதை மெத்த வேதனையோடு, நான் இந்த மாமன்றத்தில் மத்திய அரசிற்கு, இந்த அரசின் சார்பாக எடுத்துக் காட்டுகிற அந்தப் பணியிலே என்னையும் இணைத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜனதா ஆட்சிக்காலத்திலே மத்திய அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு பிஜு பட்நாயக் அவர்கள் தொழில் அமைச்சர் பொறுப்பிலே இருந்த நேரத்திலே துர்க்காபூர் ஆலைக்கு பல முக்கியமான திட்டங்களை அனுமதித்து விட்டார்கள்.
அதுபோலவேதான் கர்நாடகத்தில் குதிரைமூக்கு என்ற இடத்திலும், ஆந்திராவில் விசாகையிலும், இரும்புத் தொழிற் சாலைகள் இன்றைக்கு ஏற்பட்டு அவை நடைமுறைக்கு வருகிற இந்தக் காலகட்டத்தில் நாம் அரும்பாடுபட்டு, பலநேரங்களில் போராடி எழுச்சி நாள் கொண்டாடி என்.டி.ஸி. கூட்டத்திலும் தமிழ்நாடு சார்பில் வலுவான வாதங்களை எடுத்து வைத்து நான்காவது ஐந்தாண்டு திட்டத்தைக் கூட நாங்கள் புறக்கணிக்கிறோம். என்று கூறி அவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த சேலம் இரும்புத் தொழிற் சாலைத் திட்டம் இன்றைக்கு வெறும் ஒரு ஸ்டீல் ரோலிங் கம்பெனி என்ற அளவிற்கு ஆகிவிடுமோ என்று அச்சப்படத்தக்க அளவிற்கு கூனிக் குறுகிப் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைக்குள்ள ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் அத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே ஆட்சியாளர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாம் கோரிய அந்த இரும்புத் தொழிற்சாலைத் திட்டம் உருவாவதற்கான ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
13,000 தொழிலாளர்களைக் கொண்ட பி.அண்ட்.சி. மில் இன்று மூடப்பட்டிருக்கிறது. இது தொழில்துறை மானியம் என்றாலும் கூட தொழிலும் தொழிலாளர்களும் இணைந்தே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் இல்லாமல் தொழில் இல்லை. தொழில்களை நம்பி தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். எனவே, இந்தியாவிலேயே மிகப் பெரிய ஏன் ஆசியாவிலேயே மிகப்