உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தொழில்துறை பற்றி

மேலான விவரங்கள் மத்திய அரசுக்கே கூட தெரிவிக்கப் படவில்லை என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தத் தொழிற்சாலை நியூஸ் பிரிண்ட் தயாரிக்கக்கூடிய அளவிற்கு தன்னுடைய வழிமுறைகளை வகுத்துக் கொண்டு பணியினை முடுக்கி விட்டிருக்கிறதா என்றால் லை. இந்தத்

தொழிற்சாலைக்கு சேர்மேனாக யாரை நியமித்து இருக்கிறீர்கள்? இந்தக் கேள்வியைச் சொல்வதற்கு முன்பு ஒரு பழைய விஷயத்தை ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். 1975-76ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபொழுது, நம்முடைய இன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு அரங்கநாயகம் அவர்கள், இந்த வரிசையிலே எதிர்க்கட்சி வரிசையிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக அமர்ந்து ஒரு பிரச்சினையை எழுப்பினார்.

"தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பிக் தொழிற்சாலையைத்தான் சொல்ல வேண்டும். அங்கே 84 கோடி ரூபாய் அளவில் தொழிற்சாலையை ஆரம்பிக்கின்றீர்கள். அடுத்து கடலூரில் 120 கோடி அளவில் ஆரம்பிக்க உரிமம் வழங்கி யிருக்கிறார்கள். கடலூரில் ஆரம்பிக்கவில்லை; உங்களுக்குத் தெரியும், என்றாலும் அவர்கள் சொன்னதைச் சொல்கிறேன். “ஏறத்தாழ 220 கோடி அளவில் ஒரு மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ஒரு தனி மனிதர் நடத்தக்கூடிய நிலையில் இன்றையதினம் இந்த அரசு செய்திருக்கிறது. அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் அவைகளை ஆரம்பிக்கத் தயாராக வந்தார்கள்? அதிலே குறிப்பாக திரு. சிதம்பரம் செட்டியார் என்னும் நபர் எந்த அடிப்படையில் தலைசிறந்து நிற்கின்றார்? என்ற விளக்கத்தை தொழில் அமைச்சர் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று திரு. அரங்கநாயகம், இன்றைய கல்வி அமைச்சர் அவர்கள், அன்றைக்கு எதிர்கட்சியிலேயிருந்து கேட்ட பொழுது, அன்றைய தொழில் அமைச்சர் மாதவன் அவர்கள் அளித்த பதில், “அண்ணா அவர்களுடைய கொள்கை தொழில் துறையில் பின்பற்றப்பட வேண்டுமென்று சொன்னார்கள். 'ஸ்பிக்' எப்படி உருவானது என்று கேட்டார்கள். அண்ணா அவர்கள் இருந்தபொழுது சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற தனி நிறுவனம் அண்ணா அவர்களை சந்தித்து கூட்டுத்துறையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று ஒரு மனு