உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அதன் விளைவாகக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் இடங்களை அண்ணா அவர்களே; கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிவித்தார். அப்போது நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க; நான் எனது பிறந்த ஊரான "திருக்குவளை” உள்ளிட்ட நாகைத் தொகுதியில் நிற்கலாமென்று முடிவு செய்துகொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் அண்ணா அவர்கள், அன்றைய தலைமைக் கழகமிருந்த ராயபுரம் அறிவகத்தில்

இருந்தார்கள். சந்தித்தேன். அண்ணா

கையாலேயே என் பெயரை "குளித்தலை தொகுதி"யில் குறிப்பிட்டு; என்னைக் கேட்காமலேயே அறிவித்துவிட்டார். மறுத்துரைக்காமல் குளித்தலையில் வேட்பாளராக நின்றேன். அந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொடங்கி, நாகை வரையில் இருந்த அனைத்துத் தொகுதிகளிலும் நான் ஒருவன் மட்டுமே கு ளித்தலையில் வென்றேன். ஆம்; சட்டப்பேரவை நுழைவுக்கான கதவு இப்படி எனக்குத் திறக்கப்பட்டது. 1957ஆம்

ஆண்டு