62
தொழில்துறை பற்றி
இணைக்கப்பட வேண்டுமென்று தங்களைக் கேட்டுக் கொண்டேன். தாங்களும் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டீர்கள். அவர்களால் இன்னொரு பத்துப் பேருக்கு அந்தப் பட்டியலிலே பிறகு தொடர்ந்து இடம் கிடைத்தது. ஆனால் இன்றைக்கு நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் அந்த விழாவிலே கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்து விட்டதாக. ஆக அவர்கள் பெருந்தன்மைக்குத் தருகின்ற மதிப்பு இதுதான். எடுக்கிற முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டுமென்று எண்ணி இந்த முடிவுகள் எடுக்கப்படும்பொழுது, அந்த முடிவுகளை நிறைவேற்ற முடியாத அவஸ்தையிலே அவர்கள் இருப்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் கூட நீங்கள் எடுத்த முடிவு, முடிவுதான். அவர்கள் வந்து விழாவைச் சிறப்பிக்காவிட்டாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா சொன்னாரே, அவருடைய தம்பிகள் என்ற முறையிலே எங்கு இருந்தாலும் வாழ்த்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) முடிவு பற்றி அவர் இங்கு முழங்கிய காரணத்தால் .
மாண்புமிகு பேரவைத் தலைவர் : வாழ்த்துவதோடு அந்தப் பரிசுப் பொருள்களை வீட்டுக்கே அனுப்பி வையுங்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதைப் பெற்றுக் கொள்வார்களோ என்னமோ எனக்குத் தெரியாது. வர இயலாமல் இருந்தால் பரிசுப் பொருள்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்; வர முடியாது என்று சொன்னால் அனுப்பி வைப்பது சிரமம். ஏனென்றால் முன்பு இந்தியத் திருநாட்டினுடைய வெள்ளி விழா கொண்டாடப்பட்டபோது தாமிரப் பத்திரங்கள் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொழுது, பெருந்தலைவர் காமராசருக்கு, தந்தை பெரியாருக்கு, மூதறிஞர் ராஜாஜிக்கு எல்லாம் தாமிரப் பட்டயங்கள் வழங்கப்படும் என்று பத்திரிகைகளிலே விளம்பரம் வந்தபொழுது மூதறிஞர் ராஜாஜி எனக்குக் கடிதம் எழுதி இருந்தார். “அந்தத் தாமிரப் பத்திரங்கள் எனக்கும் உண்டு என்று பத்திரிகையில் படித்தேன். அதை, யாரையாவது அனுப்புகிறேன், கொடுத்து அனுப்புங்கள்" என்று எனக்கு எழுதி இருந்தார். தாமிரப் பாத்திரங்களைக் கொடுப்பதற்கு விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படாமல் இருந்தபொழுதே அவருடைய பெரும் குணம், “ஒரு ஆளை அனுப்புகிறேன், கொடுத்து அனுப்புங்கள்”