கலைஞரின் சட்டமன்ற உரைகள்
69
நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெக்னிசியம் மெட்டல் தொழிற்சாலையும், காட்பாடியில் ஆரம்பிக்கத் திட்டமிடப் பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் தொழிற்சாலையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்ற குறிப்பையும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்
இப்போதுள்ள கூட்டுத் துறைகளினுடைய தொழில்களி
னுடைய எண்ணிக்கை 43. இதிலே 23 தொழிற்சாலைகள் 69லேயிருந்து 76ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றன. மீதம் உள்ள இருபதில் 10 தொழிற்சாலைகள் கடந்த ஆட்சியிலே தொடங்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இன்னும் ஆரம்ப நிலையிலே உள்ளவை 10 தொழிற்சாலைகள். பொதுத்துறைக்கும், கூட்டுத் துறைக்கும் மொத்த முதலீடு 921 கோடி ரூபாயில், டிட்கோ முதலீடு மாத்திரம் 92 கோடி ரூபாயாகும். மீதம் உள்ள மற்ற தொகைகளை நிதி நிறுவனங்களும், பொதுமக்களும் தருகின்றார்கள். 92 கோடி ரூபாய் முதலீடு செய்தும் கூட, சரியான டிவிடன்ட் லாபப் பங்கீடு கிடைக்காத காரணத்தால் இந்த முதலீட்டுக் கொள்கையை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டதையும் உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.
ஏற்கெனவே சொன்னதைப் போல, டிட்கோவினுடைய முதலீடு 26 பர்சென்ட், தனியார் முதலீடு 25 பர்சென்ட், பொது மக்களுடைய பங்கு 49 பர்சென்ட். 26 சதவீதம் டிட்கோ, இதுவரை செய்த மொத்த முதலீடு 92 கோடி ரூபாய். பெரிய தொழிற்சாலை நிறுவவேண்டும் என்றால், அதிக முதலீடு மேலும் தேவைப்படுகிறது. அதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 கோடி யிலிருந்து, ரூ. 30 கோடி வரையிலும், தேவைப்படுகிற நிதியை ஒதுக்க வேண்டியிருக்கிறது. அந்த நிதியை டிட்கோவிற்கு அரசுதான் ஒதுக்க வேண்டி யிருக்கிறது. ஆனால் ரூ. 30 கோடி ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலைக்கு மாறாக அரசு ரூ. 6 கோடி அளவிற்குத்தான் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு நிதிநிலை இடம் அளிக்கிறது என்பதையும் நான் அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே தான் இந்த நிலையில் கூட்டுத் துறையில் டிட்கோ 26 சதவீதம் முதலீடு செய்ய இயலாத