கலைஞரின் சட்டமன்ற உரைகள்
71
தொடங்கும்போது அரசு மற்றும் அனந்தசாமி என்ற ஒரு தனியார் அந்தக் கூட்டுத் துறையிலே பங்கு ஏற்று அது ஆரம்பிக்கப்பட்டது. நான் விவரங்களுக்குள்ளே நுழைய வில்லை. அது தேவையும் இல்லை என்ற காரணத்தால், அதற்குப் பிறகு 1977-ல் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அந்தத் தனியாரிடமிருந்த பங்குகளை எல்லாம் அரசே பெற்றுக்கொண்டு, அரசி னுடைய பங்கு 62 சதவீதம் என்று உயர்ந்தது. எனவே அது ஏறத்தாழ அரசுத்துறையினுடைய தொழிலாக அன்றைக்கு மாறி விட்டது. தனியாருக்கும் அரசுக்கும் பங்கு இருந்து, தனியார் 25, அரசு 26 சதவீதம் என்று இருந்து, அரசு ஒதுங்கிக் கொண்ட நிகழ்ச்சியல்ல இது. தனியாரிடமிருந்து அந்தத் தொழிலை அரசே பெற்றுக்கொண்டு, அது அரசுத்துறை தொழிலாக ஆன பிறகு, அரசு அதை விற்க முன் வந்ததுதான் கண்டனத்திற்கு உரியதாக ஆனதே தவிர, வேறு அல்ல. அதுமட்டுமல்ல, நிதிச் செயலாளர் அவர்கள் அன்றைக்குப் பக்கம் பக்கமாக எழுதுகிறார். இதை விற்கக் கூடாது என்று. விற்கப்பட்ட பிறகுகூட, அக்கவுண்டண்ட் ஜெனரல் அதிலே ஏற்பட்ட தவறுகளை எல்லாம் பக்கம் பக்கமாகச் சுட்டிக்காட்டுகிறார். அது முறைகேடாக விற்கப் பட்டிருக்கிறது என்று எடுத்துக் காட்டுகிறார். இன்னும் இதிலே வேடிக்கை என்னவென்றால், அரசாங்கத்தி னுடைய தொழில்களிலேயே ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 கோடி வருமானமுள்ள தொழிலாக இருந்தது இந்த காரைக்குடியிலே இருந்த தொழிற்சாலை ஒன்றுதான். அதை விற்க வேண்டுமா என்பதுதான் பிரச்சினையே தவிர, வேறு அல்ல. எனவே அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதற்கும் நான் சொல்கின்ற இந்தக் கருத்திற்கும் நிரம்ப வேறுபாடு இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற தவறுகள் இப்போது நாம் இப்போது நாம் வகுத்துள்ள இந்த 'டிஸ்- இன்வெஸ்ட்மென்ட்' என்ற கொள்கையிலே நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியினை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து அரசு சார்பு நிறுவனமான டாமின் பற்றி வைக்கப் பட்டுள்ள கொள்கைக் குறிப்பைக் குறித்து இங்கே பலரும் தங்க ளுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தச் சிறிய