கலைஞரின் சட்டமன்ற உரைகள்
81
ஆபர் வருகிறது. அதிலே மிக அதிகமாகக் கிடைத்தது 34 லட்சம் ரூபாய் அதிக டெண்டர். முதலிலே கேட்டது 45 லட்சம் ரூபாய். அதற்கு தரப்படவில்லை. இப்போது அதிகமான டெண்டர் 34 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோனியர் இஞ்ஜினியரிங் சிண்டிகேட் நிறுவனம் 30-12-88-ல் 34 லட்சம் ரூபாய்க்கு அதை வாங்கிக் கொள்கிறது. 45 லட்சம் ரூபாய்க்கு கொடுக்க மறுத்து காலம் தாழ்த்தி கோப்புகள் பந்தாடப்பட்டு அதிலே ஆணையே பிறப்பிக்காமல் இருந்ததன் விளைவாக இந்தத் தொழிற்சாலையை விற்றதிலே 11 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஏன்? என்ன காரணம்? எந்தக் காரணமும் இல்லை. முதலில் 45 லட்சம் ரூபாய்க்குக் கேட்டவர் நம்முடைய பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர் பொங்கலூர் பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்தவர். இந்த ஒரே ஒரு ஒரு காரணம்தான். இந்த ஒரு காரணத்திற்காக 11 லட்சம் ரூபாயை இந்த அரசு இழந்தது. அந்தக் காழ்ப்புணர்வோடு முதலமைச்சர் அவர்களுடைய செயலாளர் செயல்பட்டு இருக்கிறார். முதலமைச்சருக்கே தெரியாமல்; இதைத் தான் முன்பு, திருநாவுக்கரசு அவர்கள் கேட்டார்கள், வந்தவுடனே இப்படி அதிகாரிகளையெல்லாம் மாற்றி விட்டீர்களே என்று. இப்படி முதலமைச்சரைக் காட்டிக் கொடுத்த அதிகாரியை நான் மாற்றாமல் இருக்க முடியுமா என்று இப்போது நான் நண்பர் திருநாவுக்கரசு அவர்களைக் கேட்க விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) போகட்டும், என்ன செய்யப் போகிறோம். நடந்தவைகளைச் சொல்லிவிட்டோம். என்ன நடக்கப்போகிறது என்பவைகளை அறிவிக்க வேண்டாமா அந்தக் கட்டத்திற்கு வருகிறேன்.
236 கோடி ரூபாய்க்கான தொழிற்சாலைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவு அடையாமல் அல்லது அரைகுறை நிலையிலே இருக்கிற தொழிற்சாலைகளைப்பற்றிய விவரங்களை இங்கே எடுத்து வைக்க விரும்புகிறேன்.
'டிட்கோ' நிறுவனத்திற்குக் கிடைத்த உரிமங்களை அடிப்படையாக வைத்து கடந்த காலத்திலே பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில்
4 - க.ச.உ. (தொ.து.)