84
தொழில்துறை பற்றி
இந்தியாவின் மொத்தத் தேவையில் 52 சதவீதம் கடிகாரங்களை இத்தொழிற்சாலை பூர்த்தி செய்கிறது. இத்தொழிற்சாலை தயாரிக்கும் 'குவார்ட்ஸ்' கடிகாரங்கள்தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகின்றன. இத்தொழில் நிறுவனம் கடிகாரங்களுக்குத் தேவையான 'கேஸ்'-களை, கூடுகளை, உரிமம் பெற்று வெளிநாடுகளிலேயிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது அந்தக் 'கேஸ்'-களையும் இங்கேயே தயாரிப்பதற்கு அனுமதியைப் பெற்றிருப்பதால் இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் மூலதனத்தில் இந்த 'கேஸ்' தயாரிக்கும் தொழிற்சாலை பூர்த்தி செய்யப்பட்டு உற்பத்தியைத் தொடங்கும்.
(6) சோயா பீன்ஸ் எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலை. சோயா பீன்ஸ் என்ற 'புரதச் சத்து' நிறைந்த விதைகளைப் பயிர் செய்து அதிலிருந்து சோயா எண்ணெய் தயாரிக்கிற தொழிற்சாலையை கூட்டுத் துறை 'டிட்கோ'-வும் 'சக்தி நிறுவனமும்' இணைந்து 27 கோடி ரூபாய் மூலதனத்திலே பொள்ளாச்சிக்கு அருகில் நிறுவி உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு இதற்குத் தேவையான 90 ஆயிரம் டன் சோயா விதைகள் இந்த மாநிலத்திலே உற்பத்தி செய்யப்படவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு அந்த இலக்கினை நோக்கி இத்தொழிற்சாலை முன்னேறிக்கொண்டிருக்கிறது.
(7) செங்கை-அண்ணா மாவட்டம், மதுராந்தகத்தில் 17 கோடி ரூபாய் மூலதனத்தில் 'ரெலையன்ஸ் செராமிக்ஸ்' தொழிற்சாலை 'டிட்கோ' நிறுவனமும் 'லைட் ரூபிங்' என்ற நிறுவனமும் சேர்ந்து கூட்டுத் துறையில் 17 கோடி ரூபாய் மூலதனத்தில் மெருகூட்டப்பட்ட தரை மற்றும் சுவர் ஓடுகள் தயாரிக்கும் ரெலையன்ஸ் சிராமிக்ஸ் தொழிற்சாலை நிறுவப்பட இருக்கிறது.
(8) வடாற்காடு மாவட்டத்தில் வேலூரிலிருந்து வாணியம் பாடிக்குச் செல்லுகின்ற வழியில் தோல் பதனிடும் தொழிற்சாலை, தோல் பொருள்களைப் பதனிட்டு அவற்றிலிருந்து பல்வகையான பொருள்களைச் செய்வதற்காக கூட்டுத் துறையில் 1.6 கோடி ரூபாய் மூலதனத்தில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, இப்போது