86
தொழில்துறை பற்றி
இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. அந்த இறக்குமதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, நூறு சதவீதம் ஏற்றுமதி சார்புடையதாக அமைக்க வேண்டுமென்பது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு திட்டங்கள். அதற்கான பேச்சுவார்த்தைகளை அந்த நிறுவனம் தமிழக அரசோடு அண்மையிலே நடத்தி முடித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி). அதற்கு வேண்டிய அனுமதியை மத்திய அரசு கொடுத்தவுடன் இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுவத் தேவையான வழிவகைகளை நம்முடைய அரசு செய்துகொடுக்கும்.
ஏனென்றால் இத்தகைய பெரும் தொழில், அதுவும் பெட்ரோ கெமிக்கல் தொழில் அமைவதால் அதனைச் சார்ந்த பல்வேறு தொழில்கள் வளர வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் அரசு இதிலே முழுக் கவனம் செலுத்தி வருகின்றது.
அடுத்து தொழில் மையங்கள், ஏதோ நிதிநிலை அறிக்கை யிலே சொன்னீர்கள், ஒன்றையும் காணோமே என்று நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் மெத்த வருத்தப்பட்டார்கள். மத்திய அரசு அண்மையிலே அறிவித்துள்ள தொழில் மையங்கள் அமைத்திடும் பொறுப்பு சிப்காட் நிறுவனத்திடத்திலே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 3 இடங்கள் மைய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் மையங்களுடைய நோக்கம் என்னவென்றால் பிற்பட்ட பகுதிகளிலே தொழில் வளம், அதைப் போல முன்னேற்றத்தை ஊக்குவிப்பது ஆகியவைகளாகும். அதற்கு அடிப்படையாக இருப்பது, ஒரு பகுதியில் மலிந்திருக்கும் வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை, குறைந்த வசதியுள்ள வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் தொழில் பேட்டைகளை அமைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.
ஏற்கெனவே ஹோசூர், இராணிப்பேட்டை, மானாமதுரை போன்ற இடங்களில் இந்தத் தொழில் பேட்டைகள் இருந்த போதிலும் கூட, மத்திய அரசு நீங்கள் 6 இடங்களை