உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

91

பற்றிக்கூட சொன்னார்கள். அந்த மாசுகளையும் அதுபோல கழிவு நீரால் ஏற்படக் கூடிய உபாதைகளையும் அகற்ற வேண்டும் என்று பல லட்சம் ரூபாய்கள் செலவிலே அரசு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. வெகு விரைவிலே இந்த ஆண்டே கூட, அந்தத் கூட, அந்தத் திட்டங்கள் மிக முனைப்பாக செயல்படுத்தப்படும் என்பதையும் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை இந்த அவைக்கு நான் சொல்லியாக வேண்டும். வட சென்னையில் அனல் மின் நிலையம் ஒன்று அமைக்கின்ற திட்டத்தை ஏற்கெனவே இருந்த அரசு தொடங்கியது. அந்தத் திட்டத்தின்படி முதல் கட்டத்தில் 210 மெகாவாட் கொண்ட 3 அலகுகள், இரண்டாவது கட்டத்தில் 210 மெகாவாட் கொண்ட 2 அலகுகள், மூன்றாவது கட்டத்தில் 500 மெகாவாட் கொண்ட 2 அலகுகள், ஆகமொத்தம் 2,050 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டங்கள் இடப்பட்டுள்ளன. முதல் கட்ட மின் நிலையத் திட்டத்திற்கு மைய மின் அதிகார மன்றம் மார்ச் 1984-லிலும், மைய திட்டக்குழு ஏப்ரல் 1987-லும் அனுமதி தந்துவிட்டன. இதற்கு 547 கோடி ரூபாய் செலவாகும் என்று 1984ஆம் ஆண்டிலே கணக்கிடப்பட்டது. இப்போது திருத்திய மதிப்பீடு இவ்வளவு நாள் ஆன காரணத்தினாலே 721 கோடி ரூபாய் ஆகிறது. தாமதத்தால் ஏற்பட்ட திருத்திய மதிப்பீடு இது. 541 கோடி ரூபாய் என்பது 721 கோடி ரூபாயாக தாமதித்தால், திருத்திய மதிப்பீடாக ஆகியிருக்கிறது. இத் திட்டத்தின் முதல் இரண்டு ஆலைகளுக்கு 150 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க, அதாவது இந்திய நாணயத்தின்படி 225 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முன் வந்துள்ளது. அவர்கள் முன்வந்து விட்ட காரணத்தினாலே நாம் அந்தக் காலத்திலிருந்து இப்போதும் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் முன்வந்த காலத்திலிருந்து வட்டி செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய

லை லமை மாநில அரசுக்கு ஏற்பட்டது. இந்தத் திட்டத்திற்கு செங்கை-அண்ணா மாவட்டத்தில் எண்ணூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 2171 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி 1986-ல் தொடங்கப்பட்டது. ஆனால் வி.ஜி. பன்னீர்தாஸ் நிறுவனத்திற்குச்