பக்கம்:தொழில் வளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித்திறனும் லாழ்க்கைத்தரமும்

97



றிற்கு அறிவுரை வழங்கவும் துவக்கப் பட்டதாகும். மற்றொரு குழுவான தேசியத் தொழில் முறை வாணிகப் பயிற்சிக்குழு, கைத்தொழில் துறையில் ஒரே சீரான தரங்களைக் கொண்டுவரவும், திறமைக்கு நற்சான்றுகளை வழங்கவும், நாட்டில் பயிற்சித் திட்டத்தை ஒருமைப் படுத்த ஒரு மையச் செயல் நிலையம் அமைவதற்காக, சமீபத்தில் உருவாகி உள்ளது. வாணிப மேலாட்சிப் (Business Management) பயிற்சிகள் டெல்லி, கல்கத்தா, சென்னை, பம்பாய்ப் பல்கலைக் கழகங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள பல, ஆராய்ச்சி நிலையங்களும் பிற நிலையங்களும் தொழில் துறைகளில் உற்பத்தித்திறன் பெருகுவதற்குத் தத்தம் பகுதிகளில் தமது பங்கினைச் செய்கின்றன எனலாம். இவற்றுள் விஞ்ஞானமும் தொழிலும் பற்றிய ஆராய்ச்சிக் குழு தன் கீழ்ப் பின்னிப் பெருகி உள்ள பல ஆராய்வுக் கூடங்களையும் (Laboratories) ஆராய்ச்சி நிலையங்களையும் பெற்று இருக்கிறது. அவை அகமதாபாத் ஆராய்ச்சிச் சங்கம் (ATIRA) பம்பாய் நெசவு ஆராய்ச்சிச் சங்கம் (BTRA) தென்னிந்திய நெசவு ஆராய்ச்சிச் சங்கம் (SITRA) தேசியச்செயற்படும் பொருளாதார ஆராய்ச்சிக் கவுன்சில் (National Council of Applied Economic Research) கல்கத்தாவில் உள்ள யுனெஸ் கோ ஆராய்ச்சி மையம், இந்தியப் பணியாளர் மேலாட்சி நிலையம் (Indian Institute of personnel Management), சிறுதொழிற் பணி நிலையங்கள் (Small Industries Service Institutes) பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான நிலையம், கல்கத்தாவில் உள்ள அகில இந்திய சமூக நலமும், வாணிப மேலாட்சியும் பற்றிய நிலையம் முதலியவைகள் ஆகும்.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/100&oldid=1382392" இலிருந்து மீள்விக்கப்பட்டது