பக்கம்:தொழில் வளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித்திறனும் வாழ்க்கைத்தரமும்

99



அது செய்த சிபாரிசு இந்த அறிக்கையில் முக்கியமான இடம் பெற்றது. இந்தச் சிபாரிசு, பயனுள்ள முறையில் உற்பத்தித்திறன் உணர்வு இயங்குவதின் விளைவாகத் தேவைப்படும் சிறந்த தொழில் நுணுக்க உதவி அமைவதற்கும் உற்பத்தித்திறன் உயர்ந்து தோன்றுவதற்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்தோடும் தரப்பட்டதாகும்.

1957ல் தொழில்களின் வளர்ச்சியும் ஒழுங்கு முறையும் பற்றிய சட்டத்தின் கீழ் சட்டவரம்பிற்குள் நிறுவப்பட்ட முக்கூட்டு அமைப்பான தொழில்களின் மையக் கருத்துரைக் குழு (Central Advisory Counci of Industries), நாட்டில் உற்பத்தித்திறன் முயற்சியை நிறுவுவதற்கு, தேசிய உற்பத்தித்திறன் தூதுக் குழுவின் சிபாரிசை ஆராய்ந்து பார்த்து, அந்தச் சிபாரிசை முழுதும் ஆதரித்து ஒரு கருத்தரங்கைக் கூட்டித் தேசிய உற்பத்தித்திறன் குழு (NPC) வின் அமைப்பு முறையும் திட்டமும் பற்றிய விவரங்களை முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தது. இதன் விளைவாக 1957ம் ஆண்டு செப்டம்பரில், தொழில் துறையினரிடமிருந்தும் தொழிலாளரிடமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்களுடனும், மத்திய சர்க்கார் அமைச்சகங்களுடனும் ஆரம்பக் கூட்டங்கள் நடைபெற்றன. இதன்பின்பு 1957ம் ஆண்டு நவம்பர் மாதம், நடைபெற்ற கருத்தரங்கில் நாட்டின் பலவகைப்பட்ட நிலையங்கள், அமைப்புக்கள் சர்க்கார் - ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொண்டனர். இக் கருத்தரங்கில் தான் (NPC) என், பி சின் அமைப்புத் திட்டம், நிகழ்ச்சி முறை, நிதி நிலைகள் என்பவற்றின் விவரங்களும், உள்ளூர் உற்பத்தித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/102&oldid=1382267" இலிருந்து மீள்விக்கப்பட்டது