பக்கம்:தொழில் வளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தொழில் வளம்


தங்களுடையதே. என எண்ணும் நிலை வரவேண்டும். இந்நிலை வர வேண்டுமாயின் அவன் மனம் பெரும் அளவில், திருப்தி அடைந்து ஆக வேண்டும். அதற்கு அவன் வேலை செய்யும் இடம், அதைவிட்டு வீடு சென்றால் வீடு இங்கெல்லாம் அவன் மகிழ்ச்சியாக இருக்கத் தொழிற்கூடத்தை நடத்தும் மேலாட்சியினர்தான் காரணம் என்ற சந்தேகமற்ற தூய எண்ணம் அவன் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு உண்டாக்கி வைப்பது இந்தப் பணியார் பற்றிய பகுதியே ஆகும்.

இதற்காக இப்பகுதி மேலாட்சியினருக்கு அத்தொழிற்கூடத்தில் உள்ள அனைவருக்கும் மாத ஊதியத்தை வாரி வாரி அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்ட முடியாது. அப்படித்தான் கொடுத்தாலும் இந்த மன நிறைவும், ஊக்குவிக்கும் சக்தியும் இம்மாதிரி நிறைய ஊதியம் வாங்கும் ஆரம்பகாலத்தில் சில நாட்கள் தான் தொழிலாளர்கள் மனத்தில் இருக்கும். சிறிதுகாலம் சென்றபின் வழக்கப்படி இந்த அதிக ஊதியம். தனது தேவைகளுக்குப் பற்றாத அளவிற்கு வந்து விட்டதை அவன் அறிகிறான். இந்த நிலையில் ஊதியம் அதிகம் பெற்றும், தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மேல் அத்தியாவசியமான (Luxurious) தேவைகளை அதிகமாக்கிக் கொள்வதனால் தான் பணம் பற்றவில்லை என்பதை மறந்து, மேலாட்சியினர் கொடுப்பது பற்றவில்லை என நினைக்க ஆரம்பிக்கிறான். ஊதியம் அதிகம் பெற ஆரம்பித்த நாளில் இருந்து, இந்த எண்ணம் உண்டாகும் நாள்வரை அவன் தனது வேலையில் ஊக்கமுடன் மனப்பூர்வமாக வேலை செய்ய எண்ணுகிறான். இந்த நாட்களுக்குப் பின் அந்த ஊக்கம் குறைய ஆரம்பித்துவிடுகிறது. இதை மேலை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/149&oldid=1382259" இலிருந்து மீள்விக்கப்பட்டது