பக்கம்:தொழில் வளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

தொழில் வளம்


குறைந்தபட்ச அளவுக்கு மேல் வேலை செய்தால், அப்படிச் செய்யப்பட்ட வேலைகளை எல்லாம் சேர்த்து வாரக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ இவ்வளவு அதிக ஊதியம் என நிர்ணயித்துக் கொள்வது, இந்த ஊதியம் வாங்கும் ஊதிய அளவில் அதே வீதமாகவும் அல்லது அதைவிட அதிகமாகவோ அல்லது குறைந்தோ இருக்கும். அந்தந்த மேலாட்சி தொழிற்கூடம் இவைகளைப் பொறுத்து இருக்கும். மற்றதில் மாத ஊதியமே வேறு வகையில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் செய்யும் உருப்படிகள், அவரவர் கணக்குக்குக்கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வோர் உருப்படிக்கும் இவ்வளவு விலை என நிர்ணயித்து அந்தத் தொழிலாளி செய்த எல்லா உருப்படிகளுக்கும் உண்டான மதிப்பையும் விலையையும் அவ்வார அல்லது மாதக் கடைசியில் கணக்கிட்டு ஊதியமாய்க் கொடுப்பார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. அந்தந்த வேலையின் தரத்தையொட்டி எந்த ஒரு தொழிலாளியும் குறைந்தபட்ச அளவு ஒரு தொகையை அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை மேலாட்சியினரோ அல்லது தொழிலாளியோ மறந்துவிடக்கூடாது. இந்தக் குறைந்த பட்சத் தொகைக்குமேல் வருமானம் வரச்செய்யவே இந்தப் போனஸ் திட்டமும் உருப்படி வீத மதிப்புத் திட்டமும் கையாளப்படுகின்றன. இவற்றில் அந்தந்தத் தொழிலாளியும் அவரவர் திறமையைப் பொறுத்தும் ஊக்கத்தைப் பொறுத்தும் எந்த அளவிற்கு அதிக உழைப்புக் கொடுத்து அதிக உருப்படிகளைச் செய்கின்றானோ அவனுக்கு அடிப்படைச் சம்பளத்தைவிடத் திருப்திகரமான முறையில் அதிகத் தொகை கிடைக்க வழி உண்டாகிறது. ஊக்கமுடன் வேலை செய்ய முடியாதவர்கள் அடிப்படைச் சம்பளத்துடன் மன நிறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/151&oldid=1382274" இலிருந்து மீள்விக்கப்பட்டது