பக்கம்:தொழில் வளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

177


வரம்பெற்று விட்டன. முப்பது வயதுக்கு மேற்பட்டும் எழுபது வயதுக்கு மேற்படாமலும் உறுப்பினர் இருக்கவேண்டும் என உறுப்பினர்களுக்கு, வயதையும் பிறவற்றையும் இயல்புகளையும் வரையறைசெய்து குடவோலை முறையில் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிலையினை எண்ணின் நாம் இன்று அத்துணைத் திட்டமாக ஐம்பெருங் குழுவாகிய பஞ்சாயத்தை ‘ஆக்குகிறோமா?’ என்ற ஐயம் பிறக்கும். பஞ்சாயத்தாரை ஏற்படுத்தி அவர்கள் வழியே கிராமங்களின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து மேல் உள்ள அரசாங்கத்தார் தலையீட்டை எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுக் கவ்வளவு குறைத்துக்கொண்டு கிராம வாழ்வையும் உழவுத் தொழிலையும் வரலாறு அறிந்த நாள் தொட்டு நேற்று வரையில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் போற்றிவந்துள்ளனர். எனவே இன்று ஆளுகின்றவர்களும் அதே போல் கருத்திருத்தத் தொடங்கியுள்ளமை நல்ல அறிகுறியேயாகும். எனினும் இன்னும் சிறந்த அளவில் கிராமங்களும் அவற்றின் உயிர்நாடியாகிய உழவுத் தொழிலும் அண்ணல் காந்தியார் காட்டியபடி சிறக்க வளர்க்கப்பெறல் வேண்டும்.

நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப் பெறுகின்றன. அவை மேலிருந்து கீழே இறங்கிவரும் வகையில் பகுக்கப்பெறுகின்றன. அத்துறையில் வல்ல பல அறிஞர்கள் அத்திட்டங்களை வகுக்கவும் திட்டங்கள் செயல்படவும் பலவகையில் உதவுகின்றார்கள். எனவே அவர்தம் திட்டங்களில் குறை காணமுடியாது என்றாலும் அவர்தம் திட்டங்கள் கீழிருந்து மேலே சென்றால் சிறந்த பயன் உண்டாகும் என்பது என்கருத்து. கீழே

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/180&oldid=1400222" இலிருந்து மீள்விக்கப்பட்டது