பக்கம்:தொழில் வளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

206

தொழில் வளம்


குறைந்த வட்டிக்குக் கடனாகப்பெற்று நூல் முதலிய பொருள்களை வாங்கித் தன் கீழ் உள்ள பதினைந்து கிளைப்பகுதிகள் மூலம் (units) எல்லா அடிப்படைச் சங்கங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றது. ஓர் ஆண்டில் (59-60) இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் நூல் வாங்கி இது பகிர்ந்தளித்துள்ளது. இதற்கிடையில் இச்சங்கமே கூட்டுறவு அமைப்பில் திருநெல்வேலிப் பேட்டையில் ஒரு கூட்டுறவு ஆலையை அமைத்து அதன் வழியும் நூல் உண்டாக்கிச் சங்கங்களுக்கு உதவுகின்றது. அதற்கென இச்சங்கம் 15 லட்சம் மூல தனத்தை அளித்துள்ளது. அப்படியே பல அடிப்படை நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இந்த ஆலையின் மூலதனத்துக்கு உதவ முன்வந்தன. 1958ல் 8000ம் கதிர்களோடு இவ்வாலை தொழிற்படத் தொடங்கிற்று. அடுத்து மற்றாெரு 8000ம் கதிர்களுடனும் வேலை செய்ய இடம் பெற்றுள்ளது. இது தனியார் துறையே இல்லாது எல்லாவற்றையும் கூட்டுறவுச் சங்கங்களும் அரசாங்கமுமே ஏற்றுத் தொழிலாற்றும் ஒப்பற்ற தனி நிலையில் உள்ளது:

தமிழ் நாட்டுக் கூட்டுறவு சங்கம்15,15,000
அடிப்படைச் சங்கங்கள் 16,71,700
தமிழ்காட்டு அரசாங்கம் 10,10,100
____________

 41,96,800

ஆகச் சுமார் நாற்பததிரண்டு இலட்ச ரூபாய்ச் செலவில் கூட்டுறவு ஆலை இயங்கி வருகின்றது. 20s1 எண் நூலையே இது உற்பத்தி செய்கிறது. மாதம் ஒன்றுக்கு 750 பேல்களை இது உற்பத்தி செய்து உதவுகின்றது எனக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/209&oldid=1400505" இலிருந்து மீள்விக்கப்பட்டது