பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல், செயலின்மை என்ற இரண்டையும் பற்றி ஹிந்து சாத்திரங்கள் கூறியவற்றை வைத்துக் கொண்டு வாழ்க் கைக்கு ஏற்ற ஒரு வழியை அவர் கண்டு பிடித்தார். அண்டை அயலார் பயனற்றது என்று கூறிற்ைகூட, அது பற்றிக் கவலைப்படாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தனக் கென ஒரு வழியைக் கண்டு பிடித்து, அதனைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய ஒரு வழியைப் பின்பற்ற வேண்டு மாயின், அதற்கு சுதந்திரமான திட மனம் வேண்டும் : ஆனல் அத்தகைய மனமோ மிகமிக ஆபூர்வமானது. "சிந்தனையளவிலாவது தன்னிச்சையான வரைக் காண்பது எவ்வளவு கடினமானது? சட்டப்படி நாம் வாழ்கிருேம். சிலர் படுக்கையே கதி எனக் கிடைக்கின்றனர் ; ஆளுல் அனே வரும் உலகமே கதி எனக் கிடக்கின்றனர். என் பக்கத்து வீட்டுக் காரரை, அவர் எவ்வளவு அறிவுடையவராயினும் காட்டிற்கு அழைத்துச் சென்று, மக்களுடைய நிறுவனங் கள் பற்றி அவர் ஏற்கெனவே கொண்டிருக்கும் எண்ணங் களே உதறிவிட்டு, இயற்கையைத் திறந்த மன நிலையுடனும் புதிய பார்வையுடனும் காணுமாறு கூறுகிறேன். ஆனல் அவரால் அது முடிவதில்லை. ஏனெனில்,அவர், தம் பழைய மரபுகளையும், கற்பனைகளையும் விட்டுவிடத் தயாராயில்லை. அரசாங்கங்கள், கல்லூரிகள், செய்தித் தாள்கள் என்பவை கற்பாந்த காலத்திலிருந்து கற்பாந்த காலம் வரை நீடித் திருக்கும் என அவர் கருதுகிருர்’ என்று எழுதியுள்ளார். செய்தித் தாள்களின் அச்ச மனப்பான்மை தோரோ வுக்கு வெறுப்பை அளித்தது. டைம்ஸ்’ பத்திரிகையைப் (காலம் என்ற பொருளைத் தரும் இச் சொல்) படிப்பதை விட்டு விட்டுக் காலங் கடந்தவற்றை (Eternities)ப் படியுங்கள் என்று அவர் கூறியுள்ளார். முக்கியமான விஷயங்களாகிய வாழ்வு, மரணம் நல்ல நூல்கள் என்பவை பற்றி, ஒரு குழந்தையின் நினைவு என்ன என்பதை வெளியிடு வதுகூட மிகவும் துணிச்சலான காரியம் என்று கருதி மிகச் சமீப காலத்தில் வெளியான ஒரு பத் திரிகை அதனே வெளி விட ஆஞ்சுகிறது. மிகவும் கோழைத்தனமுடைய பத்திரிகை யைப்போலவே, துணிபுடைய பத்திரிகையுங்கூட இவற்றை வெளியிட மதப் பூசாரிகளின் அனுமதியைக் கோருகிறது. ஏசுநாதருக்கும், சமயத் தலைவர்கட்கும் போராட்டம் நடை பெற்ற காலத்தில் இப் பத் திரிகை இருந்திருப்பின், அப் 99