பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு இனத்தையும் நான் வேறு இனத்தையும் சேர்ந்தவர் களாக இருப்பினும் எங்களுக்குள் போராட்டம் எதுவு மில்லே என்று எழுதியுள்ளார். பில் வீலர் என்ற சோம் பேறி எப்பொழுதும் தொழுவத்திலேயே படுத்து உறங்கு வார். அவர் தனிமையாகவே வாழ்ந்தார்; எந்த வேலை யையும் செய்வதில்லை; உறவினர் யாரும் இல்லை...... வாழ்வில் ஆசை எதுவும் கொள்ளவில்லை... ...பிறர் தம்மைப்பற்றிக் கூறும் புகழுரைகட்கும் கவலைப்பட வில்லை......தோட்டக்காரன், எவ்வித விருப்பு வெறுப்பும் இன்றிப் பார்க்கும் தேரையைப் போல, உலகைப் பார்க்க அவருக்கு உரிமை இல்லையா ?- என்று கூறியுள்ளார். ஒரு கண்ணின் பார்வையை இழந்துவிட்ட ஜான் குட்வின் எவ்வாருே மீன்பிடித்தும், வெள்ளத்தில் மிதந்து வரும் மரக்கட்டையைப் பிடித்தும், எப்பொழுதா வது சில நேரங்களில் கூலி வேலை செய்தும், கடினமாக உழைத்தாலும் மகிழ்ச்சியுடனேயே இருந்தும் வாழ்ந்தார். காங்க்கார்டில் வாழ்ந்த மீனவர்களைப் பெரிதும் மதித்தார் தோரோ. கார்ஃபீல்ட், மைனர், பஃபர், ஹேநெஸ், போன்ருேர் பிக்கரல், பர்ச், ஆகிய மீன்களைப் பற்றியும் ஆமைகள் பற்றியும் ஓயாது பேசுவதைக் கேட்டுச் சலிப் படையாமலே இருந்து வந்தார். இவர்கள் அனைவரும் ஒரு வகையான தத்துவ ஞானிகள் என்று அவர் கண்டார். “தம்முடைய காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துகிற இவர்கள், என் விஷயத்தில் தலையிடாத இவர்கள், எளிய அடக்கமான என் அயலார்களாகலின் இவர்களைப் பெரி தும் விரும்புகிறேன். வீயஸ், ஹோமர், ஏசு, ஷேக்ஸ் பியர் என்பவர்களிடம் மட்டுமல்லாமல் மிகுட், ரைஸ், மால்வின், குட்வின், பஃபர் போன்றவர்களிடமும் நன்றி பாராட்டுகிறேன்’ என அவர் எழுதியுள்ளார். இயற்கையைப்பற்றித் தெளிந்த அறிவுடைய ஒரு குடி யானவர், நிறைந்த பரிவும், அறிவும் உடையவராக வாழ்ந் தார். வாழ்க்கை பற்றிய விஷயங்களில் எமர்ஸனும், ஹ தாதுேங் - அவரிடம் ஆலோசனை கேட்கச் செல்வ துண்டு. சிறந்த கருத்துக்கள விவாதஞ் செய்வதில் விருப்பங் கொண்ட எட்மண்ட் ஹோஸ்மர் தோரோவுக்கு மிகவும் பழக்கப்பட்டவரானர். “வால்டன்’ என்ற தம் நூலில் நல்ல அறிவுடைய இவர் காட்டினிடையே நீண்ட 112