பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். இதனைச் செய்து முடிப்பதற்காக, ஜான் தோரோ, ஒரு பென்சில் தொழிற்சாலேயைத் தம் வீட்டிலேயே ஏற் படுத்திக் கொண்டார். திருமதி தோரோ, சிற்சில வேளை களில் பணம் கொடுக்கும் விருந்தினர்களைத் தம் இல்லத் தில் ஏற்றுக் கொண்டார். இந்தப் பென்சில் தொழிற் சாலையை ஜான் தொடங்கும்பொழுது, ஹென்றிக்கு வயது ஆறு. * ஹென்றி முதலாவதாகப் படித்த பள்ளிக்கூடம், பாஸ்டனில் இருந்தது. அந்த நகரத்தின் தெருக்கள் அவ ருடைய மனத்தைவிட்டு நீங்கவே இல்லை. கோடைக் காலத்தில் ஒரு நாள் அவருடைய அத்தை ஒருவர், நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்த கனவு உலகமாகிய வால்டன் என்ற இடத்துக்கு ஹென்றியை அழைத்துச் சென்ருர். அங்கே நிழல் தரும் பைன் மரக் காடுகளும், பளிங்கனைய ஏரியும் இருந்தன. அந்தக் காட்டின் காட்சி தான் என் கனவுகளுக்குப் பின்னணியாய் அமைந்தது. என்னுடைய ஆன்ம விருப்பமான அந்த இனிய தனிமையை அவை தந்தன......' எனப் பிற்காலத்தில் அவர் வரைந்துள்ளார். இம்முறையில் இளமையிலேயே அவர் இயற்கையின் வலிமை, உயிர்த்தன்மை என்ப வற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். உண்மையான இன்பம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. குளங்களில் துள்ளிக் குதிக்கும் சிறு மீன்களேயும், கோடைக் காலத்தில் ஒரு மாலைக்குள் உற்பத்தியாகின்ற கோடிக் கணக்கான சின்னஞ்சிறு பூச்சிகளையும், வசந்த காலத்தில் வனம் முழுவதிலும் எதிரொலிக்கும் மரத்தவளைகளின் (ஹைலா) ஓயாத இசையையும், பட்டுப் பூச்சிகள் பல்லா, யிரக்கணக்கான வகையில் நிறங்கள் மாறுபடும் சிறகு களுடன் கவலை இல்லாமற் பறந்து திரிவதையும், ஒடை களில் மின்னே மீன்கள் எதிர்த்து நீச்சல் அடித்து விளை யாடுவதையும் சிந்தித்துப் பாருங்கள் ... ... என்று பிற் காலத்தில் அவர் எழுதியுள்ளார். - அவர் காங்க்கார்டில் உள்ள ஒரு டன்னியில் புகுவதற் குத் தயாராளுர்; அங்குப் போதிக்கப் பெற்ற கல்வி மரபை யொட்டி இருந்ததுடன், பழைய இலக்கியங்களும், பிரெஞ்சு மொழியுமே முக்கியத்துவம் பெற்றிருந்தன. நடனமாட 8