பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 3 “ஆற்றில் ஓடும் தண்ணீர் போன்றது மானுட வாழ்வு. மனிதன் கற்பனை செய்யாத அளவுக்கு இவ்வருடம் , வெள்ளம் பெருகி, வறண்ட மேட்டுநிலங்களை யெல்லாம் வெள்ளக் காடாக்குகிறது. * - தோரோ : வால்டன் _ "தனிமை நிறைந்த இந்த மாலே நேரத்தை, எனது நல்ல நண்பராகிய ஹென்றி தோரோ, தம்முடைய எளிமைத் தன்மையாலும் தெளிந்த காட்சியாலும் இன்ப முடையதாகச் செய்தார். இம் முறையில் 1838 பெப்ருவரி 17 ஆம் தேதி எமர்ஸன் தம்முடைய நாட்குறிப்பில் எழுதி -யுள்ளார். அன்று மாலை முழுவதும் எமர்ஸனுடய தோட் -டத்தில் அவர்கள் இருவரும் ஒன்ருக இருந்தனர். எமர்ஸன், தம்முடைய வாழ்க்கையிலேயே முதன் முறையாக, மற்ருெ ருவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறர் கவனிக்கும் சூழ்நிலையிருந்தால் ஹென்றி மிகுதியாகப் பேசக்கூடியவர். அன்றியும் அவர் எமர்ஸனுக்கே கற்பிக்கக் கூடிய சில விஷயங்களும் இருந்தன. உதாரணமாகச் சிவப்பு இந்தியர்களும் காங்க்கார்டில் உள்ள அவர் வாழ்க் கைச் சின்னங்களும் ஒன்று. கனடா நாட்டு கம்பிளி வாணிகர்களேப் பற்றியது மற்ருென்று. (பெரிய யாத்ரிகரும் இயற்கை வல்லுநருமான அலெக்ஸாண்டர் ஹென்றி எழுதிய கனடா நாட்டில் சுற்றுப்பயணமும் வீரச் செயல் களும்' என்னும் துலேப் படித் தளுல் ஏற்பட்ட உடனடிப் பயணுகும்.) அடுத்து ந்யூ இங்கிலாந்தில் குடியேறிய ஆதிமக்களின் வரலாறு ஆகும். இவையெல்லாவற்றையும் விட அதிகமாக, கார்லேலும், எமர்ஸனும் எழுதிய இயற்கை யின் துண்மைகளிேப்பற்றி யல்லாமல் பருப்பொருளான மண், மலை, காற்று, தாவரம், விலங்கு, மனிதன் என்பவை பற்றியே ஹென்றி பேசினர். இயற்கை வரலாற்றில் அவர் கொண்டிருந்த இந்த ஆர்வமே, நாளாவட்டத் தில் அவருடைய அறிவாளி 25