பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிவுகளைக் கடந்து, உள்ளே உறையும் அவர்களுடைய அந்தராத்மாவை அறிய முற்பட்டார். இந்தச் சொற்பொழி வுகளின் அடியில் ஆழமற்ற மனிதரைக் கண்டால் உடனே அவர்களுடைய அகங்காரத்தைத் தட்டிவிட எப்பொழு தும் அவர் தயங்கியதே இல்லை. வாசாலகர்களான இந்தச் சொற்பொழிவாளர்களின் உரைகளே அதிக மதிப்புடனும், ஆளுல் அதிக நம்பிக்கை வைக்காமலும் தோரோ கவ ளிைத்து வந்தார். அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அவர் விரும்பிலுைம், அவர்கள் கூட்டத்தி லிருந்து விலகி இருக்கவே விரும்பினர். அதிலும் சிறப் பாகப் புதுச் சமுதாய விவகாரங்கள் வரும்போதெல்லாம் மேலும் ஒதுங்கியே இருந்தார். 1840 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது. அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அந் நிகழ்ச்சி பெரிய இடத்தைப் பெருவிடினும், தோரோவின் வாழ்வில் அது முக்கியமான ஒன்ருகும். "தி டயல்- என்ற இதழை எமர்ஸன் தொடங்கினர். மிகக் குறுகிய காலமே அது உயிர் வாழ்ந்தது எனினும், ந்யூ இங்கிலாந்தின் பண்பாட்டு நிலேய மாக பாஸ்டன் நகரம் அப்பொழுது இருந்தமையால் இந்த இதழ் அங்குதான் வெளியாயிற்று ; முன்னுறுக்கும் குறைந்த சந்தாதார்களே இருப்பினும் அறிவாளிகளின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. தோரோவைப் போல உலகிற்கு அறிமுகம் ஆகாத எழுத்தாளர்களே, உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கும் பணியை இந்த இதழ் மேற் கொண்டது. ஊக்கம் மிக்க மிஸ் எலிஸபெத் பீபாடி என்பவர் * தி டயல்- இதழின் வெளியீட்டாளராக அமர்ந்தார். சமீப காலத்தில் தான் பாஸ்டனின் மேலத் தெருவில் அவர்தம் வெளியீட்டு நிலையத்தை நிறுவிப் பிற உலகியல் கடந்த வெளியீடுகளையும் அவருடைய மைத்துனரான நதானியல் ஹாதார்னின் நூல்களையும் வெளியிடலாஞர். 1840 முதல் 1842 வரை டயல் இதழை மார்கரெட் ஃபுல்லரே ஆசிரியராக அமர்ந்து நடத்தினர். இளமை நிறைந்த பள்ளி ஆசிரியராகிய தோரோவின் கட்டுரைகளே, கற்றுக்குட்டி முயற்சியென்று அவர் திருப்பி அனுப்பிவிட் டார். இது தோரோவின் கர்வத்தைப் பாதித்தாலும், அவர் எழுத்து நடையில் முன்னேற்றத்தைப் பெறப் பெரிதும் 31