பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னுடன் வாழச் செல்வதற்கு முன்ன்ர், தனித்து வாழ்வதில் ஏற்பட்டிருந்த பற்று மறுபடியும் தம்மிடம் ஏற்படுவதை உணர்ந்தார். ஜெர்மன் தத்துவ ஞானியாகிய ஜிம்மர்மான் எழுதிய தனிமை, நெஞ்சினிடத்துச் செலுத்தும் ஆதிக்கம் என்ற நூலைக் கற்ருர். எமர்ஸ்னுடைய . இயற்கை - என்ற நூல் அவருடைய மனத்தை விட்டு நீங்கவே இல்லை; அதில் காணப்பெறும் : காடுகளில்தான் அழியா இளமை இருக்கிறது...... ... காட்டு வாழ்க்கையில் அறிவும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன :: என்ற சொற்க ளேயும் மறக்கவேயில்லை. மின்வீச்சுச் சிட்டுக்குருவியின் இசையில் எல்லேயற்ற ஓய்வையும் அமைதியையும் ” கண்டார் தோரோ. - இதே மனநிலையுடன்தான் வால்டன் குட்டையின் அருகில் ஒரு மரவீட்டை அமைத்துக்கொள்ளும் நோக்கத் துடன் ஒருநாள் ஆல்காட்டின் கோடரியைக் கடன் வாங்கிக் கொண்டு, காட்டுக்குச் சென்ருர், தம் மனநிலையைச் சரி செய்துகொள்ளும் நோக்குடன் எங்காவது சென்று சில காலம் தனித்து வாழ விரும்பினர். பிறர் வாழும் இடத்திற்கு நீண்ட தூரம் அப்பாற் சென்றுவிட வேண்டும் என்று விரும்பிய அவர், அவர்களே மறந்துவிடுவதற்காக அவ்வாறு செய்யக் கருதவில்லை. அதன் எதிராக, அவர்களைப் :புறத்தே இருந்து காண வேண்டும் என்ற நோக்கத் துடன்தான் அவ்வாறு செய்ய விரும்பினர். வீட்டிலோ வெனில் அவருடைய தாய், சகோதரியர் இருவர், அத்தை மார்கள், ஓயாமல் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள்-யாவரும் தாம் பேசும் சமுதாய சீர்திருத்த விவாதங்கள் மூலமாக அவருடைய காதுகளைப் புளிக்க வைத்தனர். எமர்ஸன் போன்றவர்களின் வீடுகட்குச் சென்ருல், உலகியல் கடந்த பேச்சுக்களால் அவ்விடங்கள் நிறைந்திருந்தன. ஆரம்பத் தில் சுவையாயிருப்பினும், திரும்பத் திரும்ப வற்புறுத்தப் பட்டமையால் அப்பேச்சுக்களின் சுவை மங்கிவிட்டது. எனவே, அவர், மெளனமாகத் தனியே இருந்து சிந்தித்து எழுதுவதில், பொழுதைக் கழிக்க விரும்பினர். வாழ்க் கையை ஒரு மூலைக்கு வெருட்டி, எளிமையாக்கி, அதன் உட் கோனே அறிய விரும்பிஞர். நான் ஒரு ஸ்பார்ட்டனப் போல்வலிமைபெற்று வாழ்ந்து, வாழ்வு அல்லாத அனைத்தை யும் ஒழித்து விரட்டவிரும்பினேன்..... என எழுதியுள்ளார். 41