பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் வைத்திருந்த நல்ல ஆணிகளே எல்லாம் திருடினர். குடிசையைக் கட்டி முடிப்பதற்கு முன், அதன் பின்புற மிருந்த மண்மேட்டைத் தோண்டி ஒரு நில அறை செய்து கொண்டார். பனிக்கட்டியும், குளிர் காலமும் காய்கறிகளை அழித்து விடாமல் அவற்றைக் காப்பாற்றவே இந்த நில அறை பயன்படுத்தப் பெற்றது. இவ்வாறு நிலத்தைத் தோண்டி, இடையே உள்ள வேர்களே எல்லாம் வெட்டிச் சென்று ஏழடி தோண்டியதும் நல்ல மணலைக் காண்பதில் அவர் மகிழ்ச்சி யடைந்தார். ஆதிகால மனிதன் மேலே கூரை வேய்வதற்கு முன்னர், மண்ணைத் தோண்டித் தன் உக்கிராண நிலவறையைத் தயாரித்துக் கொள்ளும் இயல் பையே இச்செயல் காட்டுகிறது. இச்செயல் மூலம், பாஸ் டனிலுள்ள வீடுகளில் காணப்படும் நிலவறைகளும் இதே கருத்தில் தான் ஏற்பட்டன என்று அவர் சிந்திக்கத் தொடங்கினர். மேலும், அந்த வீடுகள் எத்துணை அழகாக இருப்பினும், நிலவறைக்குள் அழைத்துச் செல்லும் வாயிற்படிகளே அந்த அழகிய வீடுகள் என்றும் கருதினர். நிலவறைகள்தாம் வீட்டின் பல பகுதிகளிலும் நிலத்து நிற்கக்கூடிய பகுதி என்பதும் அவருடைய கவனத்தைக் கவர்ந்தன. அந்த வீடே அழிந்து விட்டா லுங்கூட பூமியிலுள்ள வளேயாகிய அந்த நிலவறை அழியாமல் இருக்கும் அல்லவா ? காங்க்கார்ட் நகரத்தில் வாழ்ந்து மறைந்த மக்களைப்பற்றி அறிய ஆவல் கொண் டிருந்தார் தோரோ. ஆகவே, ஒரு நூற்ருண்டின் பின்னர் அவர் கட்டிய நிலவறையைத் தேடிக் கொண்டு வால்ட னுக்கு மக்கள் செல்வார்கள் என்பதை அவர் அறிய முடிந்திருந்தால், மகிழ்ச்சி யடைந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. - குடிசையைக் கட்டத் தேவைப்பட்ட ஒவ்வொரு மரத் துண்டையும், ஒவ்வொரு மண்வெட்டி மண்ணையும் காணும் பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியை நீடிப்பதற்காகவும், அவற்றைக் காணும்பொழுது மனத்தில் தோன்றும் புதிய எண்ணங்கட்காகவும் குடிசை கட்டும் பணியை அவர் சாவதானமாவே செய்து வந்தார். குடிசையை அமைப்டர் தற்குச் சில உலகியல் கடந்த நண்பர்களே, அவர்கள் தமக்குப் பழக்கமில்லாதவர்களாக இருப்பினும், பயன் படுத்திக் கொண்ட காரணம், அண்டை வீட்டாருடன் 44