பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் முறை. எளிய, சிக்கனமான வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டி, டீ, காப்பி ஆகியவற்றை விட்டுவிட்டார். என்ருவது ஒரு நாள் வால்டனில் கிடைக்கும் மீனே உண்பது தவிரப் பிற நாட்களில் புலால் உண்பதை விட்டு விட்டார். அவருடைய வீடு பதினேந்துக்கு பன்னிரண்டு அடி பரப்பளவுடைய தாய். மேலே ஒரு பரணியும். கீழே ஒரு நிலவறையும் பெற்று விளங்கியது. இந்த அறையில் அவர் "ஒரு படுக்கை, ஒரு மேசை, ஒரு சாய்மேசை, மூன்று நாற் காலிகள், மூன்றங்குலம் குறுக் களவுள்ள ஒரு முகம் பார்க்கும் கண்ணுடி, ஒரு குறடு, ஒரு விறகு தாங்கி, ஒரு கெட்டில், ஒரு சிறு கொப்பறை, ஒரு வாணலி, முகக்கும் கரண்டி, ஒரு கை கழுவும் சட்டி, இரண்டு கத்திகள், ஒரு முள், மூன்று தட்டுகள், ஒரு கப், ஒரு சிறு தேக்கரண்டி ஆகியவற்றுடன் எண்ணெய் ஜாடி ஒன்று, வெல்ல ஜாடி ஒன்று, ஜப்பானிய விளக்கு ஒன்று ஆகியவற்றைக் கொணர்ந்து சேர்த்தார். நாற்காலிகள் அதிகமாக இருப்பதைக் கண்டு, ஒன்று தனித் திருக்கவும், இரண்டு நட்பை வளர்க்கவும், மூன்று சமுதாயத்தை வரவேற்கவும் தேவை என்று அவர் கூறுவதுண்டு: அதிகப்படியாக இருந்த ஒரு தட்டுக் காரணமாக, விருந்தினர் ஒருவராக இருந்தால் அவரையும் தம் உணவைப் பகிர்ந்து கொள்ள அவர் அழைப்பதுண்டு ; ஆளுல் ஒரே நேரத்தில் ஒரு வருக்கு மேற்பட்டவர் வந்திருந்தால் அவர்களே உணவுக்கு அழைப்பதே இல்லே. வீட்டு வேலே என்பது எளிமையான தாகவும், உற்சாகத்துடன் செய்யக் கூடியதாகவும் இருந்தது. அவருடைய வீட்டில் அழுக்கு ஏறினவுடன், மறுநாள் விடியற்காலம் எழுந்து எல்லாச் சாமான்களையும் வீட்டிற்கு வெளியே அப்புறப்படுத் திவிட்டு, வீட்டைத் துப்புரவு செய்து காலே வெய்யிலில் உலர விட்டு விடுவார். சாமான்கள் வெளியிற் கிடப்பதைக் கண்டு அவர் கழைக்கூத்த டிகளின் சாமான்களைப் போல என்னுடைய சாமான்கள் புல்லில் குவிந்து கிடப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கிறது. மூன்று கால்களேயுடைய மேசை, அதன் மேலுள்ள புத்தகங்கள். எழுது గ్రా? - ஆகியவை, பைன் மரங்களின் நடுவே கிடப்பதும் ஒர் அழகைச் செய்கிறது. வெளியே கொணரப்பட்ட இந்தச் 47