பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை முழுவதுமே கடவுள் என்ற கொள்கையை ஒப்ப முடியவில்லை. லண்டன் அதீனியம்- என்ற பத்திரிகையில் இந் நூலே மிகவும் பழித்துத் திறனுய்வு வெளியாயிற்று. மெலசூஸிட்ஸ் முத் திங்கள் இதழில் அக்காலத்தில் அமெரிக்காவின் சிறந்த திறனுய்வாளர் என்று போற்றப் பட்ட ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல் என்பார் நகைச்சுவை யுடன் இந் நூலைத் திறய்ைவு செய்து ஆசிரியரின் தனித் தன்மையையும், நகைச்சுவையும் பாராட்டினர். ஆளுலும் இந்த நூல் பொதுமக்களைக் கவரவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து, அச்சான ஆயிரம் பிரதிகளில் எழு நூற்று ஆறு பிரதிகள் ஆசிரியரிடமே திருப்பி அனுப்பப் பெற்றன. அவருடைய சொந்த நூலகத்திற்குக் கூட்டுச் சேர்த்ததுபோல் இவையும் அங்கே அடுக்கப் பெற்றன. அதுபற்றி அவர் என்னுடைய நூலகத்தில் தொள்ளாயிரம் நூல்கள் உண்டு. அவற்றுள் எழுநூறுக்கு மேல் நானே எழுதியவை என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. 68