பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வோர் ஆற்றின் திருப்பத்தை வருணிக்கும் பொழுதும், நம்முடைய கவனத்தைத் தோரோ எதிர்பாராத வகையில் தடைப்படுத்தி விடுகிருர் , முள்ளம்பன்றி, ஒநாய் போன்ற விலங்குகளேத் துரத்திச் செல்வதைப்பற்றிக் கூடக் கூருமல், கவிதை, யோகம், வரலாற்றுத் தத்துவம் என்பவைபற்றிப் பேசத் தொடங்கி விடுகிருர். 'இந்த இடையீடுகள் ஒடையில் படகில் செல்லும் நம்மைத் தலையி லடித்து நம் எண்ண ஓட்டத்தைத் தடை செய்கின்றின. "இந்த விவாதங்களில் தோரோ புகுந்து விடுவது எவ்வாறு உளதெனில், படகிலிருந்து நண்டு ஒன்றைப் பிடிக்கக் கையை நீட்டித் தண்ணிருக்குள் மூழ்கி விடுவது போன் றுள்ளது' என்று லோவெல் எழுதியுள்ளார். அதிருஷ்ட வசமாக தோரோ உடனே நிலைமையைச் சமாளித்துக் கொள்கிரு.ர். அவருடைய அறிவு வாதமாகிய உப்பங் கழி களே மறந்து இயற்கை வரலாறு என்ற நல்ல நீரில் புகு கிருேம். அழகிய இயற்கையின் சூழலில், படகில் அமர்ந்து இனிய காட்சிகளையும், நல்ல மணத்தையும், ஒசைகளையும் அனுபவிக்கிருேம். * - - o இரவில் தங்குவதற்காக நம்முடைய சாமான்களைப் படகிலிருந்து கூடாரத்திற்கு மாற்றிவிட்டு, நெருப்பை மூட்டி, இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு அவர், நாட்டு நடப்பு இதழை(Gazette)படிக்கத் தொடங்குகிறர். நம்முடைய கூடாரம் எந்த அக்ஷ, தீர்க்க ரேகைகளில் இருக்கிறது என்பதை மட்டுமல்லாமல், அண்டத்தில் நம் நிலைமை என்ன என்பதையும் அவர் விளக்குகிருர். "இரவு நேரங்களில் ஆற்றின் ஓட்டத்தோடு சென்றுவிட்ட ஒரு முலாம் பழத்தைத் தேடிக் கொண்டு செல்கிருேம் : ஒரு பெரிய முலாம் பழத்தை ஒடையின் தொடக்கத்தில் ஒடாத கண்ணிர் நிறைந்திருந்த பள்ளத்தில் குளிர்ச்சி அடைவற். காக வைத்திருத்தோம். எங்கள் கூடாரம் தயாரானவுடன் அதை எடுக்கப் போனுேம். ஆனல் அப்பழம் நழுவி அற்றுடன் போய்விட்டது. அதைத் தேடிக் கொண்டு பட கேறிச் சென்ருேம். மந்தமாகிய அந்தி வெளிச்சத்தில் நீண்ட நேரம் கூர்ந்து கவனித்த பிறகு நீண்ட தூரத்தில் நீரிடை யே அதனுடைய பசிய வடிவம் தெரிந்தது. மாலையில் மலே யிலிருந்து அடித்துக் கொண்டு வரப்பட்ட தழை, கொடி என்பவற்றின்மேல் இப்பழம் மிதந்து கடலே நோக்கிச் 70