பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டைய வாழ்நாள் முழுவதும் இருந்த மனத் திடத்தையும், உடல் சக்தியையும் தாயிடமிருந்து பெற்றர். ஹென்றியின் நாற்பதாவது ஆண்டில், அவருடைய நாட் குறிப்பில் காணப்படும் ஒரு குறிப்பு, அவருடைய தாயாரின் உள் ளத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. இன்றிரவு என் தாயார் தம் இள்மைக் காலத்தில் வர்ஜீனியர் ரோட்டில் வசித்த நாட்களில், கோடை இரவுகளில் தாம் கேட்ட ஒலி களைப்பற்றிக் கூறினர்-பசுக்களின் அழைப்பு, வாத்துக் களின் கூவல், ஹில்ட்ரெத்ஸில் அடிக்கப்பெற்ற டிமாரத் தின் ஒலி-இவை அனைத்தையுங் காட்டிலும் ஜோ மெரியம் தம் குதிரைப் பந்தியை அழைக்கும் சீழ்க்கை ஒலி என்பவை. யாம். ஜோ மெரியம் மிகச் சிறந்த முறையில் சீழ்க்கை அடிப்பார். வீட்டில் உள்ள அனைவரும் உறங்கும்பொழு தும், என் தாய்ார்மட்டும் நடு இரவில் எழுந்து, வெளி வாயிலில் சென்று அமர்ந்திருப்பாராம். அவருக்குப் பின், புறத்தில், வீட்டிற்குள் மாட்டி இருக்கும் கடிகாரத்தின் ஒலி யைத் தவிர வேறு எவ்வித ஒலியும் அப்ப்ொழுது கேட்கா - و grrLo۰۰ தோரோவின் மனையில், அவருடைய குடும்பும் மட்டும் அல்லாமல், ஒரு சிறிய சமுதாயமே இருந்தது என்ல்ாம்: தாம் உபசரிக்க வேண்டிய விருந்தினரின் எண்ணிக்கைபற். றிக் கவலைப்படாமல், ஹென்றியின் தாயார் தம் அடையா நெடுங் கதவுவழி அத்தைமார், ஒன்றுவிட்ட சோதரர், நண்பர் ஆகிய அனைவரையும் வரவேற்ருர். இவர்களிற் பெரும்பான்மையானவர் பெண்களே. வீட்டைப் பொறுத்த வரை, மகளிரின் மத்தியில்தான், இளைய ஹென்றி வளர்ந் ※ 米 * . 本 இளமையிற் பெற்ற கல்வி, ஹென்றி தோரோவின் நினை விற் பதியவே இல்லை: அவருடைய நினைவில் இருப்பதெல் லாம், வேட்டையாடுவதிலும், விலங்குகளின் பின்னே செல் வதிலும், படகு ஒட்டுவதிலும், கூடாரத்தில் தங்கியிருப்பதி லும், நீந்துவதிலும், பனியில் சறுக்குவதிலும் கழித்த நாட்கள் பற்றித்தாம். காங்க்கார்டைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத் தும், மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்குரிய மணற்பாங்கான விளையாட்டு மைதானமும், புல் வெளியுமாகும்; சதுப்பு 35