பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி அவனிடம் சென்று அமைதியடையச் செய்து, அவனது நடுக்கத்தைத் தணிவித்தார். எந்த அதிகாரமும் அவனுக்கு ஊறு செய்ய முடியாது என்பதைப் பன்முறை எடுத்துக் கூறினுர். வழக்கம்போல் அவர் இன்று மாலை உலாவச் செல்ல முடியாது. அடிமைகளே வேட்டையாடு டவர்கள் நிறைந்திருந்தார்களாதலின், அவனைக் காவல் செய்யும் பொறுப்பு அவருடையதாயிற்று......' 1854 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில், பாஸ் டன் நகரில் ஏற்பட்ட பெரிய கிளர்ச்சியையும் குழப்பத்தை யும் பொருட்படுத்தாமல், மெஸ்சூஸிட்ஸ் அரசாங்கம், தப்பி ஓடி வந்த ஆந்தனி பர்ன்ஸ் என்ற நீக்ரோவை மறு படியும் அடிமை வாழ்விற்கே அனுப்பி வைத்தது. இதனை எதிர்த்துப் போடப்பட்ட கூட்டங்களும், அவனே விடுவிக்கச் செய்த முயற்சிகளும் பயனற்றுப் போயின. மாகாணம் முழு வதும் இந் நிகழ்ச்சியால் கலகலத்துப் போயிற்று. தோரோ விடம் அடிக்கடி தோன்றும் ஒரு வெடிப்புணர்ச்சியை இந் நிகழ்ச்சி தூண்டி விட்டது. ஜூலை 4ஆம் நாள் காங்க் கார்டிலிருந்து பதினெட்டுக் கல் தொலைவிலுள்ள ஃப்ரேமிங் ஹாம் என்ற இடத்தில் அவர் மெஸ்சூஸிட்ஸில் அடிமை வாழ்வு’ என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினர். சிவில் ஒத்துழையாமையைப்போல், இதுவும், அநீதியை எதிர்த்துச் செய்த குற்றச் சாட்டாகும். ஒரு சிறிதும் குற்றம் இழைக்காத அப்பாவி மனிதர்கள் மேல் கடுமையாகப் போர் தொடுக்கும் மாகாண சர்க்காரிடம் அவர் கொண்ட வெறுப்பை அது நன்கு எடுத்துக் காட்டியது. இத்தகைய அ நீதிகட்கு இடங் கொடுக்கும் ஒர் அரசாங்கம், அரசாங் கம் என்ற பெயருக்கே தகுதியற்ற தென்றும், தம்மைப் பொறுத்தவரையில் அது இருப்பதாகவே கருதவில்லை என்றுங் கூறியுள்ளார். 'சென்ற மாதம் முழுவதும் ஒரு பெரிய நஷ்டத்தை அடைந்து விட்டதாகவே உலர்ந்தேன். என்ன நஷ்டம் என்பதை முதலில் உணர முடியவில்லை. இ, இறந்த ஒரு பெரி நாட்டையேயாகும் என்பதை அறிந்தேன் என்று கூறியுள்ளனர். அடிமை வியாபாரத்தை அடுத்து அவர் எதிர்த்துப் போராடியது பனம் சேர்ப்பதையாகும். எவ்வாருயினும் வாழ்வது ("குறிக்கோள் இல்லா வாழ்க்கை என்ற தலைப் 琵字 کیے عم: F -