பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ☆ வல்லிக்கண்ணன்


சாப்பிடும் போது ஒவ்வொரு தோசைக்கும் நிறையவே எண்ணெய் ஊற்றிக் கொள்வாள். நெய்யும் எடுத்துக் கொள்வாள். ஹார்லிக்ஸ், போர்ன் விட்டா போன்றவற்றை சும்மாவே கரண்டியால் அள்ளி வாயில் போட்டுச் சுவைத்து மகிழ்வாள். நெய்யையும் சீனியையும் கலந்து தின் பதில் அவளுக்கு விசேஷப் பிரியம் இருந்தது.

அவள் வந்து சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. வழக்கம் இல்லாத வழக்கமாக, அவ்வீட்டில் சாமான்கள் ஏகததாறாகக் காலியாகி விட்டன. நெய்யும் எண்ணெயும், சீனியும் பிறவும் அதிகம் வாங்க நேரிட்டது. இவளை வைத்துக் கொண்டு வேலை வாங்கினால், நம்ம வருமானத்துக்குள்ளே குடும்பம் நடத்த முடியாது; கடனுக்கு மேல் கடன் தான் வாங்க வேண்டியதாகும் என்று சிவராமன் உணர்ந்தார். சிவகாமி வெளியேற நேர்ந்தது.

சிவகாமிக்கு நேர்முரணான ஒருத்தி ஒரு சமயம் அவ்வீட்டில் வேலை பார்த்தாள். பேரு ராசம்மாளோ என்னவோ. அவள் தன் வயிற்றுக்குச் சரியாகச் சாப்பிட மாட்டாள். தனக்கு உரியதை எடுத்து மூடிவைத்து விடுவாள். அப்படியே மறந்தாலும் மறந்து போவாள். "ராசம், சாப்பிட்டையா?" "சாப்பிடலியா ராசம்மா?" "நேரமாச்சு, சாப்பிடு. வேண்டியதைச் சாப்பிடு!" இப்படி அவளை அடிக்கடி 'தாங்கி' உபசரித்தாலும், அவளுக்கா மனம் இருந்தால்தான் சாப்பிடுவாள். வெற்றிலை புகையிலை மட்டும் அடிக்கொரு தடவை வாயில் திணிக் கப்படும். 'அதனால்தான் பசி மந்திச்சுப் போகுது!' சாப்பாடு வேண்டிருக்கலே என்று சிவராமன் குறிப்பிடுவார்.

அவள் சுத்தமாகவும் இருக்கமாட்டாள். மூக்கைச் சிந்தி, சுவர்மீது விரலைத் துடைப்பாள். கால் கைகளை