பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 75

 ராமலிங்கம் அந்த ஆசையை வாய்விட்டுச் சொன்னான்,

அந்தவிதமாக, தன்னந்தனியே, பகலையும் இரவையும் நாலைந்து நாட்கள் ஒட்டிவிட்டு, பிறகு கீழிறங்கி ஊருக்குள் வருகிற பூசாரி இந்தச் சூழ்நிலை வாழ்க்கையைப் பெரிதுபடுத்தவில்லையே! வயிறு என்ற ஒன்று மனிதனுக்கு இருப்பதாலும். அதன் தொல்லையைச் சகித்துக் கொள்ள முடியாமல் அதனுடைய தீய்க்கு அடிக்கடி ஏதாவது கொட்டிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் நீடிப்பதனாலும், ஏதேனும் ஒரு தொழிலைப் பிழைக்கும் வழியாகக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலினால் பூசைப் பணியை மேற்கொண்டிருந்த நபர் அந்தப் பூசாரி. அந்த ஆள் இயற்கையின் சன்னதியிலே மனம் லயித்து, இன்பமாக ஆனந்த அனுபவம் பெற முடியாதது தான்! இவ்வாறு ராமலிங்கம் சொன்னான்.

மலைமீது, காட்டு வெளியில் தன்னந் தனியாக, இரவு நேரத்தைக் கழிப்பதற்கு மிகுந்த துணிச்சலும் பொறுமையும் தைரியமும் வேண்டும் என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்படி ஒரு இரவைக் கழிப்பது கூட விசேஷமான அனுபவமாக அமையுமே! இவ்விதம் வளர்ந்த பேச்சு, பந்தயத்தில் வந்து நின்றது.

சவாலை ஏற்றுக் கொண்டு செயல் புரிய யாரும் தயாராக இல்லை. முடிவில், ராமலிங்கம் இதற்கு இசைந்தான். பூசாரி இல்லாமல் தங்கியிருக்க ஒப்புக் கொண்டான். அன்று அந்த நாளாக வந்து வாய்த்தது.

இரவு நெருங்குவதற்கு முன்னரே, பூசாரியும் மற்றவர்களோடு சேர்ந்து கீழே இறங்கிவிட்டார். சில தினங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் பூசைச் சாமான்களையும் மலை அடிவாரத்தின் சிற்றூரில்