பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 彦

தாண்டுகின்றேன் என்று சமுத்திரத்தையே தாண்டி விட்டான்.

ஆ ம ம் , அக்கரையில் காத்திருக்கும் காரிருளே உ ன க் கு க் ைக ெய ன் று. ம் , காலென்றும், முலை யென்றும், தொடையென்றும் தனியில்லை. அவனை நீ என்ன சைகை எப்படிக் காட்டி உன்னுள் வலித்துக் கொண்டாய் எனும் வியப்பில் எண்ணம் திளைக்கத் திளைக்க நெஞ்சு முள்மேல் மீன் நெளிந்து வளைந்து மாட்டிக்கொள்ளாமல் துள்ளி விளையாடி அடிவயிற்றின் ஒளி மருட்சி காட்டுகிறது.

ஆனால் நூல் மாத்திரம் வி ட் டு க் கொண்டே போகிறது. இந்த நூலுக்கு மாத்திரம் திரெளபதியின் துகில் போல் எப்படி ஒய த இந்நீளம்? இல்லை. நடுவிலேயே அறுந்து போனதைத்தான் எல்லையே இல்லாததாய் நினைத்துக் கொண்டிருக்கிறேனா?

சே, சே, இல்லை இல்லை: இல்லவே இல்லை. இந்த நூல் அறவே அறாது. இது அறுந்து போனால், பிறகு என்னதான் இருக்கிறது. என்ன இருந்துதான் என்ன? பிடிக்க மீனுமில்லை: மீன் பிடிக்க ஆளுமில்லை.

இது இருளின் நரம்பு. எண்ணத்தின் கறுப்பு மணிக்கயிறு! வானத்தின் நீலத்தினின்று உரித்த பொற்சரடு நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம். பிறவியின் ஒளி. வானத்தின் நீலத்தினின்று உரித்த சரடு. நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம். இதுதான் என் பிறவியின் தேஜஸ்.

寶 ஆனால் நான் நூலைக் களைந்து வருடங்க்ளாகி விட்டன. , - - ,

அம்மாவின் தகனத்திற்கு மறுநாள் சடங்குகளின் போது மாரைத் தடவினால் பூணுாலைக் காணோம்: