பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 105

டிற்கும் மள்ளருக்கும், குல தெய்வத்திற்கும் ஏற்ப நேரம், காலத்திற்குத் தக்கபடி நடந்து கொள் வேன், ." . . . ' ' ' . - - கூசப்பர் : நாற்பத்தைந்து அகவையுடைய நான் பாலே நாட்டுப் படைத் தலைவன். அமைச்சருக் குரிய தகுதிகள் படைத்த நான் அவரைப் ப்ோன்றே உடைகள் உடுப்பேன். மார்பில் குறுக்கே கட்டிவிலாப் புறத்தே நீண்ட வாள் வைத் திருப்பேன். மார்பில் வெள்ளிப்பட்டை ஓரத்தில் ஒடிய கவசம் அணிந்திருப்பேன். அமைச்சர் வழியே ஒழுகுவேன். - குள்ளப்பன் : அறுபது அகவை யடைந்த நான் பட்டறி வுடைய சிறை அலுவலன். படைத் தலைவருக்கு அடுத்த பதவியினன். உடைகள் யாவும் அவ்வாறே அமையினும் வெள்ளிக்கு மாருகச் செம்புப் பட்டை கள் அமைந்த உடுப்புகள் அணிவேன். முடியில் துணி முண்டாசு சுற்றுவேன். குறிஞ்சிக் கோமான் அறுபது அகவை யடைந்த நான் குறிஞ்சி நாட்டின் மன்னன். ஒட்டிய முழு காற்சட்டை. செம்மை நிறத்தது. மேலே முழுக் கைப் பசுமை திறக் கோட்டு, சட்டை, அதன் மேல் கையில்லா நீலநிறக் கோட்டு. தோள் பட்டை கைப் பட்வை, இடுப்புப் பட்டை முதலியவை பொன் கலந்தவை. முடி முழுப் பொன்னல் ஆனது. குறிஞ்சிப் பூவின் பொன்னுருவை முடி யுச்சியிலும் மார்பிலும் சூடுவேன். எவற்கும் உதவவும், ஆய்ந்து முடிவெடுக்கவும் தயங்கேன்.