உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நக்கீரர்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

நக்கீரர்.

றாது தாழ்நிலை யெய்தியவர்க்கு வேட்பித்தல், ஓதுவித் தல் முதலிய சிறந்த தொழில்கள் உளவெனக் கூறுவர். அதற்கவர் கண்டவாதாரம்,

'திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோ

டணிவளை போழுநர்.'

என்னுஞ் சிலப்பதிகாரவடியில் 'சிறந்த கொள்கை' என்றிருப்பதுவே யாகும். சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட இரு பெரும் புலவரும் இதற்கு இப்பொருள் கொள்ளவில்லை. இவ்விடத்தில் 'சிறந்த கொள்கை ' என்பதற்கு வேட்பித்தல் முதலிய பொருள் கொள்ள விருக்கும் பொருத்தத்தினை யாம் அறிந்திலம். அன்றி யும் வேட்டலே இலராயினார்க்கு வேட்பித்தல் முதலிய கூறுதல் எங்ஙனம் பொருத்தமாகும் ? இவர் கொண்ட படியே வைத்துக்கொளினும் சங்கறுக்குந் தொழிலுடை யார் பார்ப்பார் மாத்திரமேயோ ?

இனி, ' வேளாப்பார்ப்பான் ' என்பதன் பொருளை ஆராய்ந்து காண்பாம். 'பார்ப்பான்' என்பது ஒரு கார ணப் பொதுச சொல். இச்சொல் அடையின்றிக் கூறுங் கால் இடுகுறி மாத்திரையாய் ஒரு சாதியுட் பிறந்தானைக் குறிக்கும். அடையொடு படுக்குங்கால் வேறு பிறரைக் குறிப்பதுமாகும். [1] மூவகை , ஆரெயி லோரழ லம்பின் ..... எய்த....பைங்கட் பார்ப்பான்' என்புழிச் சிவனைக் குறிக்கின்றது. ' [2]பார்ப்பான் குண்டிகையிருந்த நீரும் குளுகுளு கொதித்தது. ' என்புழி அயனைக் குறிக் கின்றது. இவ்வாறே வேளாப்பார்ப்பார் என்பது கொற் றொழில்புரியும் மாபின்ரைக் குறிப்பதாகும். இது புகழா


  1. பரிபாடல்
  2. கம்பராமாயணம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/13&oldid=1108409" இலிருந்து மீள்விக்கப்பட்டது