உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச்சுக்கோப்பை குருதி வழியக்கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டாள் என்பது தமிழக வரலாறு. பெற்றோரும் உற்றோரும் காதலரும் போர்க்களத்தில் மாண்டனர் என்ற செய்தியைக் கேட்டு முரசொலி கேட்கும் திக்கிலே எதிரிப் படைகளை எதிர்த் துச் செல்வாய் மகனே என்று அனுப்பியது அன்றைய தமிழகத்தின் வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று பயமிகு படுகுழியாகி விட்டது. மேலும் அதில் நான் காதலை இழந்த காரணத்திற்காகப் பட்டாளத்திற்கு ஓடி விட்டேன் என்ற செய்தியைக் கேட்டு எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்தது ஆச்சரிய மாய் இருக்கிறது. ஆகையால் இதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் வணக்கம்.! சிவ: இத்துடன் கூட்டம் முடிவடைகிறது. எல்லோ ருக்கும்வணக்கம். சீன்.14 இடம்: மணியப்பன் வீடு சாந்தா அழல். பாட்டு) பழகி : அன்புள்ள தங்கையே! காலத்தின் வேகத்தி லும், மூட உலகத்தின் சதியிலும் உன் வாழ்வு வெட்டப் பட்டு விட்டது. நீ இன்பம் துய்க்க வேண்டிய நாள் இன் னும் அதிகம் இருக்கிறது. சாந் : அண்ணா! உலகம் என்னைத் தூற்றாதா? பழனி : உலகம் உன்னைத் தூற்ற, அது உனக்கென்ன வார்சா? உலகம் ஒரு பொறாமைப் பூச்சாண்டி! அநீதியும் அக்கிரமும் சூழ்ந்த இந்த உலகத்திற்காக நீ அஞ்சுவதும் அடங்குவதும் மடமை! இந்த உலகம் தூற்றுமே என்ற கவலையைத் தவிர உன் உள்ளம் மற்றொரு மணம் புரிந்து 48