11 மாட்டோம், இருக்கவிடோம் என்று பேசி, பவனி வரு கிறார்கள், நாட்டில்! இத்தகைய காங்கிரஸ்காரர்கள், நல்ல முறையிலே நாடெங்கும் பரவிப் பெருகி வளர்ந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டு கிலி கொள்ளாமல் எப்படி இருப்பார்கள்? ஒரே கட்சி, ஒரே இந்தியா, ஒரே ஆட்சி என்று எப்போதும் பேசிப்பேசி அதன் மூலம் எதையுமே சாதித்து விடலாமென்று,நினைத்து, ஓரளவு அந்த நினைவு வெற்றியும் தந்திருக்கின்ற காரணத்தால், காங்கிரஸ் காரர்கள் தங்களது பிடிவாத குணத்தை, ஏகாதிபத்தியக் கொள்கையை, அவ்வளவு சுலபத்தில் வீட்டுக் கொடுத்து விடமாட்டார்கள் ! தங்களால் ஆனவரை, முழு முயற்சி யையும் செலுத்தி, தங்களது முழு பலத்தையும் எல்லா வழிகளிலும் செலுத்திப்பார்த்து விடுவது என்ற முடி விற்குஅவர்கள் வந்தால், அது அவர்களது பழக்கம் வீண் பிடிவாதகுணத்தின் கோரவிளைவு என்று தான் நினைத்துப் பரிதாபப்படவேண்டியிருக்கிறது ! நல்ல திட்டங்களோடு, நாட்டு மக்களின் நல்வாழ்வு ஒன்றைமட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஆட்சி பீடத்தின் மீது, மந்திரி சபையின் மீது சிறிதும் நோட் டம் செலுத்தாமல், நாட்டின் நாலாபக்கங்களிலும் சுற்றித் திரிந்து, நாட்டுநிலையை நாட்டாரிடம் நன்கு விலக்க, நல்லறிவை யூட்டி வரும் எங்கள் இயக்கத்தை யும், இயக்கத் தோழர்களையும் பொழுதுபோக்குக் கட்சி பொழுது போக்குக்காக வேலைசெய்பவர்கள். என்று கேலி செய்கிறார் காமராஜர்!
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/11
Appearance